uae report said sridevi death is accidenthal one

போதையில் குளியல் தொட்டியில் மூழ்கினாரா ஸ்ரீதேவி..?

மது போதையில், நிலை குலைந்து குளியலறை தொட்டியில் மூழ்கி தான் ஸ்ரீ தேவி இறந்துள்ளார் என்று அறிக்கை சொல்கிறது.ஸ்ரீ தேவி மரணத்தில்,சதி செயல்களுக்கு வாய்ப்பு இல்லை என்றும்,இதற்கு முன்னதாக, மாரடைப்பு காரணமாக தான் ஸ்ரீ தேவி இறந்தார் என்று சொல்லப்பட்டு வந்த நிலையில்,இந்த புதிய தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில்,தடயவியல் மருத்துவர்கள் மேற்கொண்ட உடற்கூறு ஆய்வில், ரத்தத்தில் ஆல்கஹால் கலந்துள்ளதாகவும்,எனவே போதையில் நிலை தடுமாறி குளியலறை தொட்டியில் அவர் மயங்கி விழுந்து மூழ்கி இறந்துள்ளார் என தெரிய வந்துள்ளது.

மேலும்,ஸ்ரீ தேவி மரணத்தில் எந்த ஒரு சதிக்கும் வாய்ப்பு இல்லை என்றும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது

இது குறித்த அனைத்து தகவலும்,ஐக்கிய அரபு அமீரக முன்னனி செய்தி நிறுவனங்கள் தகவலை வெளியிட்டு உள்ளன.