Karnakata : நீ இருப்பது கர்நாடகாவில்.. கன்னடம் கற்றுக்கொள்.! ஆட்டோவில் எழுதப்பட்ட வாசகம் - கிளம்பிய சர்ச்சை
“நீ கர்நாடகாவில் இருக்கிறாய், கன்னடம் கற்றுக்கொள்” என்ற செய்தியுடன் கூடிய ஆட்டோவின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
வெறுப்புணர்வை தூண்டும் செய்தியுடன் ஒரு ஆட்டோகாரரின் படம் ஆன்லைனில் வெளிவந்து சமூக ஊடக பயனர்களிடையே சீற்றத்தைத் தூண்டியுள்ளது. கர்நாடகாவில் உள்ள ஆட்டோ ஒன்றில் எழுதிய வாசகம் தான் அது.
தற்போது வைரலான இந்த பதிவை ரோஷன் ராய் என்ற பயனர் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அந்தப் பதிவில் ஆட்டோவின் படம் பின்புறத்தில் ஒரு செய்தியுடன் இடம்பெற்றுள்ளது. “நீங்கள் கர்நாடகாவில் இருக்கிறீர்கள், (கன்னடம்) கற்றுக்கொள்ளுங்கள். U f***r என்ற அணுகுமுறையைக் காட்ட வேண்டாம். நீங்கள் இங்கே பிச்சை எடுக்க வாருங்கள், ”என்று எழுதப்பட்டுள்ளது.
இந்த பதிவு ஆன்லைனில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. "இது ஏற்றுக்கொள்ள முடியாதது" என்று ஒரு பயனர் எழுதினார். மற்றொரு பயனர், “சரி, நான் கன்னடம் கற்க மாட்டேன். பெங்களூரில் இந்தி மட்டும் தெரிந்து கொண்டு எளிதாக நிர்வகிக்கலாம். நீங்கள் என்னுடன் வியாபாரம் செய்ய விரும்பவில்லை என்றால் அது உங்கள் நஷ்டம். இந்த ஆட்டோ ஓட்டுனரின் விரோதப் போக்கால் அதிக வாடிக்கையாளர்களை இழக்க நேரிடும்” என்றார்.
சில பயனர்கள் செய்தியின் உணர்வுகளையும் ஆதரித்தனர். "நீங்கள் ஜெர்மனியில் வேலைக்குச் சென்றால், நீங்கள் ஜெர்மன் மொழியைக் கற்றுக்கொள்வீர்கள். அதே வழியில் நீங்கள் இங்கே பணிபுரிந்தால் கன்னடத்தில் தொடர்பு கொள்ள கற்றுக்கொள்ள வேண்டும்," என்று ஒரு பயனர் குறிப்பிட்டார்.
"சரி, இந்தி பேசுபவர்களுக்கு இருக்கும் உரிமையை நீங்கள் பார்க்கவில்லை" என்று மற்றொரு பயனர் கேலி செய்தார். மற்றொரு பயனாளர், “தெளிவாக போட்டோஷாப் செய்யப்பட்டது. பெங்களூரில் எந்த ஆட்டோ ஓட்டுநரும் இதை செய்ய மாட்டார்கள். மேலும், "ஃபு***ர்" என்ற வார்த்தையின் பயன்பாடு, இது போலியானது என்று குறிப்பிட்டார்.
Jio Plan : ரூ.399 ரீசார்ஜ் போதும்.. குடும்பத்துக்கே அன்லிமிடெட் ஆஃபர் - முழு விபரம் இதோ !!
Hero Bikes : ரூ.57 ஆயிரத்துக்கு கிடைக்கும் பைக்குகள்.. வேற மாறி ஆஃபர் - முழு விபரம் இதோ !!