கேரளாவில் இளைஞர் காங்கிரஸ் கட்சியை அசர்ந்த இருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து மாநிலம் தழுவிய பந்துக்கு காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ளது. 

கேரளாவின் காசர்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த கிரிபேஷ்(24) மற்றும் சரத் லால்(29) அங்குள்ள இளைஞர் காங்கிரஸ் கட்சியில் தொண்டர்களாக பணியாற்றி வந்துள்ளனர். இவர்களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகளுடன் பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கிரிபேஷ் மற்றும் சரத் லால் இருசக்கர வாகனத்தில் காசர்வோடு பகுதியில் சென்றபோது அடையாளம் தெரியாத நபர்கள் வழிமறித்து அவர்களை சரமாரியாக வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பினர். 

இதில் சம்பவ இடத்திலேயே கிரிபேஷ் உயிரிழந்தார். படுகாயங்களுடன் உயிருக்கு போராடிய சரத் லால் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அரசியல் ரீதியான மோதல் காரணமாகவே இந்த கொலை அரங்கேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இதனிடையே இரண்டு பேர் வெட்டிக்கொலை செய்தது ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் இந்த கொலைக்கு எதிர்த்து கேரளாவில் இன்று பந்த் நடத்த காங்கிரஸ் அழைப்புவிடுத்துள்ளது. இதனால் அப்பகுதியில் எந்த அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.