Asianet News TamilAsianet News Tamil

பத்திரிகை ஆசிரியர் இருவருக்கு ஒரு ஆண்டு சிறை - உரிமை மீறல் தீர்மானத்தில் சபாநாயகர் உத்தரவு...

Two years imprisonment for Magazine Editor - Rights violation resolution
Two years imprisonment for Magazine Editor - Rights violation resolution
Author
First Published Jun 23, 2017, 9:55 AM IST


எம்.எல்.ஏ.க்கள் குறித்து அவதூறான செய்திகள்வௌியிட்ட இரு பத்திரிகைகளின் ஆசிரியர்கள் மீது கர்நாடக சட்டப்பேரவையில் உரிமை மீறல் தீர்மானம் கொண்டுவரப்பட்டதையடுத்து அவர்களுக்கு ஒரு ஆண்டு சிறையும், ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்து சபாநாயகர் கே.பி.கோலிவாட் உத்தரவிட்டார்.

இதையடுத்து, சட்டசபைச் செயலாளர் எஸ். மூர்த்தி, இரு பத்திரிகைகளின் ஆசிரியர்களையும் கைது செய்யக்கோரி போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

அவதூறு செய்தி

கர்நாடாவில் ‘ஹாய் பெங்களூரு’ என்ற‘டேபுலாய்ட்’ வடிவ பத்திரிக்கையின் ஆசிரியர்ரவி பெலகரே. யலஹன்கா பகுதியில் ‘யலஹன்கா வாய்ஸ்’ என்ற டேபுலாய்டின்ஆசிரியர் அணில் ராஜ். இருவரும் எம்.எல்.ஏ.க்கள்கொலிவாட், பி.எம். நாகராஜ் ஆகியோர் குறித்து கடந்த 2014ம் ஆண்டு அவதூறாக செய்திவௌியிட்டனர்.

உரிமைக்குழு

இது குறித்து சபாநாயகரிடம் இரு எம்.எல்.ஏ.க்களும் தனித்தனியாக இரு பத்திரிகைகளின் ஆசிரியர்கள் மீது புகார் அளித்தனர். இந்த புகார் குறித்து விசாரிக்க உரிமைக்குழுவுக்கு அனுப்பி வைத்தார். இந்த புகார் குறித்து விசாரணையை முடித்த உரிமைக்குழு, தனது பரிந்துரைகளை அளித்தது.

Two years imprisonment for Magazine Editor - Rights violation resolution

குரல் வாக்கெடுப்பு

அதன்படி அந்த பரிந்துரைகள் மீது சட்டப்பேரவையில் நேற்று குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டதில் அதற்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, ஹாய்பெங்களூரு பத்திரிகை ஆசிரியர் ரவி பெலகேரை,யலஹன்கா வாய்ஸ் பத்திரிகையின் ஆசிரியர் அணில் ராஜ் ஆகியோருக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து சபாநாயகர் உத்தரவிட்டார்.

பேரவை முடிவு

இது குறித்து சபாநாயகர் கே. பி. கோலிவாட்கூறுகையில், “ இந்த தீர்மானத்தையும் ,தண்டனையைும் பேரவையால் முழுமனதோடு எடுக்கப்பட்ட முடிவு. அடுத்த கட்ட நடவடிக்கை சட்டப்படி நடக்கும்’’ எனத் தெரிவித்தார்.

போலீசாருக்கு உத்தரவு

 இதையடுத்து,  சட்டசபைச் செயலாளர் எஸ். மூர்த்தி, கூறுகையில், “ அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளோம். இரு பத்திரிகையின் ஆசிரியர்களுக்கும் பேரவை அளித்துள்ள தண்டனைபடி அவர்கள் கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்படுவார்கள்’’ எனத் தெரிவித்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios