பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய லீனா மணிமேகலையின் காளி என்ற ஆவணப்படத்தின் போஸ்டர் பதிவை டிவிட்டர் நிறுவனம் நீக்கியுள்ளது. 

பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய லீனா மணிமேகலையின் காளி என்ற ஆவணப்படத்தின் போஸ்டர் பதிவை டிவிட்டர் நிறுவனம் நீக்கியுள்ளது. காளி என்ற ஆவணப்படத்தின் போஸ்டர், காளி வேடமிட்ட பெண் புகைபிடிப்பது மற்றும் LGBTQ கொடியை பிடித்திருப்பது போன்றது சமூக ஊடகங்களில் பெரும் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சா்ச்சைக்குரிய, ஆவணப்படம் ஜூலை 2 ஆம் தேதி கனடாவின் டொரண்டோவில் உள்ள ஆகா கான் அருங்காட்சியகத்தின் திரையிடப்பட்டது. அது தொடர்பான போஸ்டரை படத்தை இயக்கிய மதுரையை சோ்ந்த லீனா மணிமேகலை தனது டிவிட்டரில் பகிர்ந்திருந்தார்.

இதையும் படிங்க: காளி போஸ்டர்: மஹுவா மொய்த்ரா மீது வழக்குப் பதிவு

இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் இந்த போஸ்டா் பெரும் சா்ச்சையைக் கிளப்பியது. அந்தப் படத்தின் போஸ்டரில் காளியை சித்திரித்துள்ள விதம் மத உணா்வுகளைப் புண்படுத்தும் விதமாக உள்ளது என்று பலர் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இதுதொடா்பாக லீனா மீது மணிமேகலை மீது கெள மகாசபை என்ற குழுவைச் சோ்ந்த ஒருவா் டெல்லி காவல்துறையிடம் புகாா் அளித்துள்ளாா்.

இதுமட்டுமின்றி ஒட்டாவாவில் உள்ள இந்திய தூதரகம் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில், வருத்தம் தெரிவித்திருக்கும் ஆகா கான் அருங்காட்சியகம், அந்த ஆவணப்படத்தை திரையிடுவதிலிருந்து நீக்கி அறிவிப்பை வெளியிட்டது. இந்த நிலையில், ஜூலை 2 ஆம் தேதி லீனா மணிமேகலை வெளியிட்ட காளி போஸ்டர் பதிவை சர்ச்சைகளுக்கு இடையே டிவிட்டர் நிறுவனம் நீக்கியுள்ளது.

இதையும் படிங்க: காளி மாமிசம் சாப்பிடுவார் மது குடிப்பார்; லீனா மணிமேகலைக்கு ஆதரவு குரல் கொடுத்த மஹுவா மொய்த்ரா

முன்னதாக திரைப்பட இயக்குனர் லீனா மணிமேகலை வெளியிட்டு இருக்கும் காளி என்ற ஆவணப்படத்தின் போஸ்டர் இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் எதிர்ப்பையும், கடும் கண்டனத்தையும் எதிர்கொண்ட போது உயிரே போனாலும் இதை எதிர்கொள்வேன் என்று லீனா தனது டுவிட்டரில் பதிவிட்டிருந்தார். இந்த நிலையில் அவரது காளி ஆவணப்படத்தின் போஸ்டர் பதிவை டிவிட்டர் நிறுவனம் நீக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.