காளி போஸ்டர்: மஹுவா மொய்த்ரா மீது வழக்குப் பதிவு
என்னைப் பொருத்த வரை மாமிசம் சாப்பிடுவர், மதுவை ஏற்றுக் கொள்பவர்தான் பெண் கடவுள் காளி என்று திரைப்பட இயக்குனரும், கவிஞருமான லீலா மணிமேகலைக்கு அகில இந்திய திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்பி மஹுவா மொய்த்ரா ஆதரவு குரல் கொடுத்து இருந்தார். இவரது கருத்தை கண்டித்து, இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மத உணர்வுகளை புண்படுத்தி இருப்பதாகக் கூறி, பாஜக தலைவர் சித்தன் சாட்டர்ஜி கொடுத்த புகாரின் பேரில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
என்னைப் பொருத்த வரை மாமிசம் சாப்பிடுவர், மதுவை ஏற்றுக் கொள்பவர்தான் பெண் கடவுள் காளி என்று திரைப்பட இயக்குனரும், கவிஞருமான லீலா மணிமேகலைக்கு அகில இந்திய திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்பி மஹுவா மொய்த்ரா ஆதரவு குரல் கொடுத்து இருந்தார். இவரது கருத்தை கண்டித்து, இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மத உணர்வுகளை புண்படுத்தி இருப்பதாகக் கூறி, பாஜக தலைவர் சித்தன் சாட்டர்ஜி கொடுத்த புகாரின் பேரில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
திரைப்பட இயக்குனரும், கவிஞருமான லீனா மணிமேகலை வெளியிட்டு இருந்த காளி என்ற ஆவணப்படத்தின் போஸ்டர் இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் எதிர்ப்பையும், கடும் கண்டனத்தையும் எதிர்கொண்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்திருந்த பேட்டியில், ''என்னைப் பொறுத்த வரை காளி மாமிசம் உண்பவர், மது அருந்துபவர்தான். உண்மையை சொல்வதற்கு யாரும் தேவையில்லை. நீங்கள் பூட்டானுக்கு சென்றால் அங்கு காளிக்கு பூஜை செய்து விட்டு, விஸ்கியை கடவுளுக்கு படைப்பார்கள்.
காளி மாமிசம் சாப்பிடுவார் மது குடிப்பார்; லீனா மணிமேகலைக்கு ஆதரவு குரல் கொடுத்த மஹுவா மொய்த்ரா
உத்தரப்பிரதேச மாநிலத்திலும் இந்த வழக்கம் இருக்கிறது. கடவுளுக்கு பிரசாதமாக விஸ்கி அழங்குவார்கள். இதை கடவுள் நிந்தனை என்றும் கூறுவார்கள். மேற்குவங்க மாநிலத்தில் இருக்கும் தாராபித் என்ற இடத்திற்கு சென்றால், அங்கு இருக்கும் சாதுக்கள் புகை அருந்துவதைப் பார்க்கலாம். இதுவும் சக்தி பீடங்களில் ஒன்று. இந்த சாதுக்கள்தான் காளியை வணங்குபவர்கள். அதுமாதிரி காளியை கற்பனை செய்வது என்னுடைய உரிமை, சுதந்திரம். சைவர்களாக இருந்து கொண்டு நீங்கள் எவ்வாறு கடவுளை வழிபடுகிறீர்களோ, அதே தார்மீக உரிமை எனக்கும் இருக்கிறது'' என்று தெரிவித்து இருந்தார்.
இவரது கருத்துக்கு கடுமையான கண்டனம் தெரிவித்து இருந்த பாஜக தலைவர் ரதிந்திர போஸ், ''மஹுவா மொய்த்ராவின் கருத்துக்கு மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜிதான் பதில் அளிக்க வேண்டும். இது முதல் முறையல்ல. இதுபோன்ற முன்பும் திரிணமூல் கட்சியினர் கருத்துக்கள் தெரிவித்து வந்துள்ளனர்'' என்று தெரிவித்து இருந்தார்.
ஆனால், மஹுவா மொய்த்ராவின் கருத்து அவரது தனிப்பட்ட கருத்தும் என்றும், இது கட்சியின் கருத்து இல்லை என்றும் திரிணமூல் கட்சி தெரிவித்து இருந்தது. இதையடுத்து, திரிணமூல் கட்சியின் அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தை பின் தொடர்வதை மஹுவா மொய்த்ரா நிறுத்திக் கொண்டார். ஆனால், முதல்வர் மம்தா பானர்ஜியை டுவிட்டரில் பின் தொடர்கிறார்.
அதே சமயம் எந்த போஸ்டருக்கும், திரைப்படத்துக்கும், புகைப்பிடிப்பதற்கும் தான் ஆதரவு தெரிவிக்கவில்லை என்று தனது கருத்தை தெளிவுபடுத்தி இருந்தார். என்னை விமர்சிக்கும் பாஜகவினர் தாராபித்துக்கு சென்று அங்கு கடவுள் தாராவுக்கு என்ன கொடுக்கப்படுகிறது என்பதை பார்க்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் இவர்மீது இன்று வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.