twitter account of indian ambassador to un hacked

ஐநாவுக்கான இந்திய தூதர் சையது அக்பருதினின் டுவிட்டர் கணக்கை ஹேக் செய்து பாகிஸ்தான் ஹேக்கர்கள் ஊடுருவினர். இதனால் இன்று தேசிய அளவில் பரபரப்பு ஏற்பட்டது.

ஐ.நா.வுக்கான இந்திய தூதராக இருப்பவர் சய்யத் அக்பருதீன். இவரது ட்விட்டர் கணக்கில் பாகிஸ்தான் ஹேக்கர்கள் ஊடுருவி, பாகிஸ்தான் தேசிய கொடி புகைப்படத்தை பதிவிட்டு, பாகிஸ்தான் அதிபர் மமூன் ஹுசைன் புகைப்படத்தையும் அதில் பதிவேற்றியிருந்தனர்.

ஞாயிறு அதிகாலை பதிவேற்றப் பட்ட இந்தப் புகைப்படத்தைப் பார்த்து பலருக்கும் அதிர்ச்சி. சய்யத் அக்பருதீனின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கம் என்பதால், அதில் ப்ளூ டிக் இருக்கும். அதுவும் அந்த நேரத்தில் மாயமாகியிருந்தது. அதன் பின்னர் சில மணி நேரங்கள் போராடி, சய்யத் அக்பருதீனின் ட்விட்டர் பக்கம் மீட்கப்பட்டது. 

இந்தச் சம்பவத்துக்கு பாகிஸ்தான் ஹேக்கர்கள் கைவரிசை காரணம் என்று கூறப்பட்டது. பாகிஸ்தான் பயங்கரவாதிகள் அண்மைக் காலமாக இணையவழித் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இந்தியாவின் முக்கியப் பிரமுகர்களின் சமூக வலைதள பக்கங்கள், அதிகாரிகளின் பக்கங்களைக் குறிவைத்து சைபர் கிரைம்களில் பயங்கரவாதிகள் ஈடுபடுகின்றனர்.