தவெக தலைவர் விஜய்க்கு பல பேருடன் தொடர்பு இருப்பதாகவும், சிலரது தூண்டுதலால் அரசியலுக்கு வந்ததாகவும் அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். விஜய் பஞ்சப்பூர் பேருந்து நிலைய வசதிகளைப் போய் பார்க்க வேண்டும் என அமைச்சர் கூறினார்.

தவெக தலைவர் விஜய்க்கு பல பேருடன் தொடர்பு இருப்பதாவும் சிலருடைய தூண்டுதலால் தான் அவர் அரசியலுக்கு வந்திருக்கிறார் என்றும் அமைச்சர் பெரியகருப்பன் கூறியுள்ளார்.

பல பேருடன் தொடர்பு இருக்கு:

திங்கட்கிழமை, சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் அமைச்சர் பெரியகருப்பன் செய்தியாளர்ளைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவரிடம் திமுக பாஜகவுடன் மறைமுக உறவு வைத்திருப்பதாக அரியலூர் பிரச்சாரத்தில் தவெக தலைவர் விஜய் விமர்சனம் செய்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதில் கூறிய அமைச்சர். “விஜய்க்குக்கூட பல பேருடன் தொடர்பு இருப்பதாகக் கூறுகிறார்கள். சிலருடைய தூண்டுதலின் பேரில்தான் அவர் அரசியலுக்கு வந்திருப்பதாகவும் சொல்கிறார்கள்.” எனக் கூறினார்.

பஞ்சப்பூர் போய் பாருங்க…

திமுக தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றைக்கூட நிறைவேற்றவில்லை என்ற விஜயின் குற்றச்சாட்டு குறித்து பதில் அளித்த அமைச்சர், “ஒண்ணுமே நடக்கல... ஒண்ணுமே நடக்கலன்னு போகிற இடத்தில் எதை வேண்டுமானாலும் சொல்லிவிடலாம். விஜய் பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தைப் போய் பார்க்க வேண்டும். அங்கிருக்கும் வசதிகள் எல்லாம் மேலைநாடுகளையே மிஞ்சும் அளவுக்கு இருக்கின்றன. அதைப் பார்த்த பிறகும் ஒண்ணுமே இல்லை என்றால்... அப்படிச் சொல்பவர்கள் சொல்லிக்கொண்டுதான் இருப்பார்கள்” எனக் கூறினார்.

அதிமுக பாஜகவுடன் நேரடியாகக் கூட்டணி வைத்திருக்கிறது என்றால் திமுகவும் மறைமுகமாக பாஜகவுடன் கூட்டணியில்தான் இருக்கிறது என நடிகரும் தவெக தலைவருமான விஜய் கூறிவருகிறார். இந்நிலையில், விஜய்க்கு பல பேருடன் தொடர்பு இருக்கிறது என அமைச்சர் பெரியகருப்பன் பேசியிருப்பது பரப்பைக் கிளப்பியிருக்கிறது.