Asianet News TamilAsianet News Tamil

வயநாடு நிலச்சரிவுக்கு நிவாரண உதவிகளை அனுப்பிவைத்த டிடிஎஃப் வாசன்!

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள டிடிஎஃப் வாசன், நிவராணப் பொருட்கள் வெற்றிகரமாக வயநாட்டில் ஒப்படைக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளார். நிவாரணப் பொருட்களை வாங்கி அனுப்பி வைத்ததை வீடியோவையும் தனது பதிவில் இணைத்துள்ளார்.

TTF Vasan helps landslide affected Wayanad sgb
Author
First Published Aug 7, 2024, 7:26 PM IST | Last Updated Aug 7, 2024, 7:26 PM IST

கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 400 க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர். இன்னும் நூற்றுக்கும் மேற்பட்டவர்களை மீட்கும் முயற்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மீட்கப்பட்டவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

நிலச்சரிவில் இருந்து உயிர் பிழைத்தவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள முகாம்களுக்குத் தேவையான பொருட்கள் பல பகுதிகளில் இருந்தும் வந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில் யூடியூபர் டிடிஎஃப் வாசனும் உணவுப் பொருட்கள் மற்றும் பிற அத்தியாசவசிய பொருட்களை வயநாட்டுக்கு அனுப்பியுள்ளார்.

இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள டிடிஎஃப் வாசன், நிவராணப் பொருட்கள் வெற்றிகரமாக வயநாட்டில் ஒப்படைக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளார். நிவாரணப் பொருட்களை வாங்கி அனுப்பி வைத்ததை வீடியோவையும் தனது பதிவில் இணைத்துள்ளார்.

பிணங்களுக்கு உயிர் கொடுக்கும் ஜெர்மன் நிறுவனம்! மரணத்தை வெல்ல இதுதான் ஒரே வழி!

வீடியோவைப் பார்த்த அவரது ரசிகர்கள் பலர் அவரைப் பாராட்டி கமெண்ட் செய்து வருகிறார்கள். "போலீஸ் கேஸ் வாசன் இல்ல, மனிதநேயம் மிக்க வாசன்" என்று ஒருவர் கூறியுள்ளார். இன்னொருவர், "விமர்சனங்களுக்கு சிறப்பான பதிலடி இதுதான்" என்று தெரிவித்துள்ளார்.

யூடியூப்பர் டிடிஎஃப் வாசன் பைக் சாகச வீடியோக்களை வெளியிட்டு பிரபலமானார். அடிக்கடி ஏதாவது சர்ச்சையில் சிக்கிக்கொள்ளும் இவர், போன வருடம் சாலையில் ஆபத்தான முறையில் பைக் சாகசம் செய்து காவல்துறையினரிடம் மாட்டிக்கொண்டார்.

இது தொடர்பான வழக்கில் சிறை சென்ற வாசன், ஜாமீனில் வெளியே வந்தார். இதனால் அவரது டிரைவிங் லைசென்ஸ் கூட ரத்து செய்யப்பட்டது. இவருடைய யூடியூப் சேனலையே பிளாக் செய்ய வேண்டும் என நீதிமன்றம் கண்டித்தது. அதற்குப் பிறகும் திருந்தாத வாசன் போன் பேசியபடி காரில் வேகமாகச் சென்று மீண்டும் போலீசாரிடம் சிக்கினார். இந்த வழக்கிலும் நீதிமன்றம் வாசனை கடுமையாகக் கண்டித்து ஜாமீன் கொடுத்தது.

நண்பர்களும் ரசிகர்களும் நல்ல புத்தி சொன்னதை அடுத்து ஒரு பிசினஸ் தொடங்கி இருப்பதாகச் சொல்லபடுகிறது. இது தவிர சினிமாவில் நடிக்கும் வாய்ப்பும் அவரைத் தேடி வந்துள்ளது. ‘மஞ்சள் வீரன்’ என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். நடிகை ஷாலின் ஜோயாவுடன் காதலில் விழுந்திருப்பதும் வாசன் கொஞ்சம் திருந்தி இருப்பதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

நோட் பண்ணிக்கோங்க... மூன்றாம் உலகப் போர் இந்த தேதியில்தான் தொடங்கும்... இந்தியாவின் நாஸ்டர்டாமஸ் உறுதி!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios