Asianet News TamilAsianet News Tamil

Tsunami warning : இந்திய பெருங்கடலில் சுனாமி எச்சரிக்கை.. அதிர்ச்சியில் ஆசிய நாடுகள்.! வெளியான பகீர் தகவல் !!

Tsunami warning issued for Indian Ocean : இந்தியப் பெருங்கடலில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tsunami warning issued in Indian Ocean Region after 6.1 magnitude earthquake strikes off East Timor
Author
First Published May 27, 2022, 1:19 PM IST

சுனாமி எச்சரிக்கை

தென்கிழக்கு ஆசிய நாடான கிழக்கு திமோர் கடற்கரையில் இன்று 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது என்று தகவல் வெளியாகி உள்ளது. இவற்றினால் ஏற்பட்ட சேதம் பற்றி தகவல் வெளியாகவில்லை. இந்த நிலநடுக்கம் பற்றி அமெரிக்க புவியியல் ஆய்வு நிறுவனம் கூறியுள்ளது.

Tsunami warning issued in Indian Ocean Region after 6.1 magnitude earthquake strikes off East Timor

இந்த நிலநடுக்கம் இந்தியப் பெருங்கடல் பகுதியில் சுனாமியை உருவாக்கும் திறன் கொண்டதாக இருக்கலாம் என்று சுனாமி ஆலோசனைக் குழு தெரிவித்துள்ளது. கிழக்கு திமோருக்கும், இந்தோனேசியாவிற்கும் இடையே பிளவுபட்டுள்ள திமோர் தீவின் கிழக்கு முனையில் இருந்து 51.4 கிலோமீட்டர் (32 மைல்) ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக USGS தகவல் தெரிவித்துள்ளது.

இந்தியப் பெருங்கடல்

இந்தியப் பெருங்கடல் சுனாமி எச்சரிக்கை மற்றும் தணிப்பு அமைப்பு (IOTWMS) இப்பகுதிக்கு சுனாமி எச்சரிக்கையை விடுத்துள்ளது. 2004 ஆம் ஆண்டு, சுமத்ராவின் கடலோர பகுதியில் 9.1 ரிக்டேர் அளவில் நிலநடுக்கம் பதிவானது. இதனால் 2.20 லட்சம் பேர் இறந்தனர். இதில் 1.70 லட்சம் பேர் இந்தோனீசியாவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த செய்தி அனைவரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

இதையும் படிங்க : "ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் அவமதித்துள்ளார்" பிரதமர் மோடி - ஸ்டாலின் விழாவில் புது சர்ச்சை.!

இதையும் படிங்க : நான் சமாதி ஆகிவிட்டேன்.. எந்த வரங்கள் வேண்டுமானாலும் கேளுங்கள்.! தொடரும் நித்யானந்தா அட்ராசிட்டிஸ் !!

Follow Us:
Download App:
  • android
  • ios