மகாராஷ்டிரா : புல்தானா மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கு திடீரென கடுமையான முடி உதிர்தல், நகம் உடைதல் நிகழ்கிறது. இதற்கான காரணம் ஒரு மாத காலமாக நடத்தப்பட்ட ஆய்வில் கண்டறிந்துள்ளன. அது குறித்து இங்கு பார்க்கலாம். 

Truth Behind Sudden Hair Fall and Nail Break in Buldhana : மகாராஷ்டிரா மாநிலம் புல்தானா மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் வசிக்கும் மக்களிடையே திடீரென அதிகப்படியான முடி உதிர்தல், நகம் உடைதல் ஏற்படுவதற்கு காரணம் என்னவென்று புதிய ஆய்வு கண்டறிந்துள்ளன. அதாவது, கோதுமையில் இருக்கும் நச்சுகூறுகள் தான் காரணம் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. 

முன்னதாக புல்தானா மாவட்டத்தின் ஷேகான் தாலுகாவில் உள்ள கிராம மக்கள் மாசுபட்ட தண்ணீரால் தங்களுக்கு முடி உதிர்வது மட்டுமல்லாமல், தங்களது நகங்கள் தானாகவே உடைந்து வருவதாகவும் புகார் அளித்துள்ளனர். மேலும் அங்குள்ள மக்களின் நகங்கள் பலவீனமடைந்து விரிசல் ஏற்படுவதும் தெரியவந்துள்ளது. இது புல்தானா மாவட்ட மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க:  Dust Storm: மும்பை மக்களை நிலைகுலைய வைத்த புழுதிப்புயல்! காரணம் என்ன?

இந்த சம்பவம் தொடர்பாக சுகாதாரத்துறையையும், மாவட்ட நிர்வாகமும் தங்களுக்கு ஒத்துழைக்கவில்லை என்று பாதிக்கப்பட்ட மக்கள் குற்றம் சாட்டினர். நாடு முழுவதும் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பிறகு தான் மாநில அரசு புல்தானா மக்களுக்கு முடி உதிர்தல் மற்றும் நகம் உடைதல் நிகழ்வதற்கான மூல காரணத்தை கண்டறிய இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலிங் (ICMR) உதவியை நாடியது.

இது தொடர்பாக மருத்துவர் ஒருவர் கூறுகையில், ஹரியானா மற்றும் பஞ்சாபில் இருந்து இந்த பகுதிக்கு வரும் கோதுமையில் அதிகளவு அதாவது சுமார் 600% செலினியம் உள்ளதால், புல்தானா மாவட்டத்தில் உள்ள கிராமத்து மக்களுக்கு திடீரென முடி உதிர்தல், நகம் உடைவது அதிகரித்துள்ளது.

இதையும் படிங்க: தாராவி மக்களை உப்பளத்தில் குடியமர்த்துவதற்கு எதிர்ப்பு; நீதிமன்றம் அதிரடி உத்தரவு

செலினியம் என்றால் என்ன?

செலினியம் என்பது மண்ணில் காணப்படும் ஒருவிதமான கனிமம் ஆகும் இது மண்ணில் இருப்பதால் தான் தண்ணீர் மற்றும் உணவிலும் காணப்படுகிறது. நிபுணர்களின் கூற்றுப்படி, ஒரு மனிதனின் உடலில் குறைந்த அளவு செலினியம் மட்டுமே தேவைப்படும். அது அளவுக்கு அதிகமானால் கடுமையான பல உடல் நல பாதிப்புகளை ஏற்படுத்தும்.