அமெரிக்க அதிபர் ட்ரம்ப்-ஐ இந்தியர் ஒருவர் கடவுளாக வழிபட்டு வருகிறார். விரைவில் ட்ரம்புக்கு கோயில் கட்ட இருப்பதாகவும் அந்த பக்தர் தெரிவித்துள்ளர்.

தெலுங்கான மாநிலத்தைச் சேர்ந்த புஸ்ஸா கிருஷ்ண என்பவர் அமெரிக்க அதிபர் ட்ரம்பை கடவுளாக வணங்கி வருகிறார். தான் எங்கு சென்றாலும், ட்ரம்பின் புகைப்படத்தை உடன் கொண்டு செல்கிறார்.

ட்ரம்ப்-ஐ கடந்த மூன்று வருடங்களாக வழிபட்டு வருவதாக புஸ்ஸா கிருஷ்ணா கூறியுள்ளார். ட்ரம்புக்காக பேஸ்புக் பக்கத்தை ஏற்படுத்தி, ம்ரம் மீதுதான் கொண்டுள்ள அன்பை பதிவிட்டு வருகிறார்.

இது குறித்து, புஸ்ஸா கிருஷ்ணா கூறும்போது எனது குடும்பத்தினரும், கிராமத்தில் உள்ளவரும் என்னை பைத்தியக்காரன் என்று அழைக்கின்றனர். என்னை நல்ல உளவியல் மருத்துவரை சென்று பார்க்குமாறும் அவர்கள் அறிவுறுத்துகின்றனர். 

நான், அவர்களிடம் எனக்கு ஒன்றும் உளவியல் சிகிச்சை தேவையில்லை... தேவைப்பட்டால் நீங்கள் செல்லுங்கள் என்று கூறினேன். ட்ரம்ப் எனது கடவுள். பிறர் தவறாக பேசுவதை பற்றி நான் பொருட்படுத்தப் போவதில்லை.

கடவுளுக்கு எந்த மாதிரியான பூஜைகள் செய்கிறார்களோ அதை அனைத்தையும் நான் கடவுளாக வணங்கும் ட்ரம்புக்கு செய்து வருகிறேன் என்கிறார் புஸ்ஸா கிருஷ்ணா. இன்றும் மூன்று மாதங்களில் ட்ரம்புக்கு கோயில் கட்ட இருப்பதாகவும் புஸ்ஸா கிருஷ்ணா கூறியிருக்கிறார்.

கிருஷ்ணா குறித்து, பக்கத்து வீட்டார் கூறும்போது, அவர் எப்போதும் ட்ரம்புக்கு பூஜை செய்து கொண்டே இருக்கிறார். அவரது பெற்றோர்கள் அவரை விட்டு, உறவினர்கள் வீட்டுக்கு சென்று விட்டனர். அவர் எங்கு சென்றாலும், ட்ரம்ப் புகைப்படத்தை உடன் எடுத்துச் செல்கிறார் என்கின்றனர்.