Trump arrived from the US as the US ambassador to international terrorists list

இந்தியாவில், ஐ.எஸ்., பயங்கரவாதிகளுக்கு ஆள் சேர்த்த கர்நாடகாவை சேர்ந்த முகமது ஷபி அர்மானை சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் அமெரிக்கா சேர்த்துள்ளது.

இதன் மூலம் சர்வதேச பயங்கரவாதி பட்டியலில் இடம்பெற்ற இந்தியாவை சேர்ந்த முதல் நபர் இவ ஆவார்.

கர்நாடக மாநிலம் பக்தல் பகுதியை சேர்ந்த முகமது ஷபி (வயது 30) மீது அமெரிக்க தடை விதித்துள்ளது. இவர் மீதான இன்டர்போல் போலீசாரின் ரெட் கார்னர் நோட்டீஸ் நிலுவையில் உள்ளது.

இந்தியன் முஜாகிதீன் அமைப்பினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க துவங்கியதும், ஷபி அர்மர், தனது சகோதரருடன் பாகிஸ்தான் தப்பி சென்றார்.

தொழில்நுட்பம் படித்து அவர், பேஸ்புக் மூலம், இந்தியா, வங்கதேசம், இலங்கையில் ஐ.எஸ்., அமைப்பிற்கு ஆட்கள் சேர்த்தார்.

கடந்த 2013-ம் ஆண்டுநேபாளத்தில் யாசின் பட்கலை கைது செய்து, விசாரணை நடத்திய போது, முகமது ஷபியின் ஐ.எஸ்., தொடர்பு வெளிச்சத்துக்கு வந்தது. இதனையடுத்து என்.ஐ.ஏ., போலீசார் விசாரணையை துவக்கினர்.

இந்தியாவின் கோரிக்கையை ஏற்று சர்வதேச பயங்கரவாதி பட்டியலில் முகமது ஷபி சேர்க்கப்பட்டு இருக்கிறார். இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை வருமாறு: .

ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு மற்றும் வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆள் சேர்க்கும் கும்பலின் தலைவராக முகமது ஷபி அர்மர் செயல்பட்டார். இந்தியாவில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட ஐ.எஸ்., ஆதரவாளர்களை தூண்டினார். இதற்காக ஆள் சேர்த்தல், ஆயுதங்கள் வாங்குதல், பயங்கரவாத பயிற்சி அளித்தார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.