- Home
- இந்தியா
- ஆபரேஷன் சிந்தூரை தடுக்க பாகிஸ்தானுக்கு அல்லாஹ் வந்து உதவினார்..! இந்தியாவை பலவீனமாகக் காட்டும் அசீம் முனீர்..!
ஆபரேஷன் சிந்தூரை தடுக்க பாகிஸ்தானுக்கு அல்லாஹ் வந்து உதவினார்..! இந்தியாவை பலவீனமாகக் காட்டும் அசீம் முனீர்..!
‘’அல்லாஹ்வின் உதவி அங்கு வருவதை நாங்கள் கண்டோம். அந்த உதவியை நாங்கள் உணர்ந்தோம். இது எங்கள் வீரர்களின் மன உறுதியை உடைக்காமல் பாதுகாத்து எதிரியின் திட்டங்களை முறியடித்த ஒரு தெய்வீக தலையீடு அது.''

பாகிஸ்தானின் இராணுவத் தலைவர் பீல்ட் மார்ஷல் அசிம் முனீர், சிந்தூர் நடவடிக்கை குறித்து அடிக்கடி அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார். சிந்தூரில் ஏற்பட்ட படுதோல்விக்குப் பிறகு, அவர் இப்போது தனது பொதுமக்களை தவறாக வழிநடத்த தொடங்கியுள்ளார். தனது முக்கிய தோல்விகளை மறைக்க அசிம் முனீர் இப்போது கடவுளை இழுக்க ஆரம்பித்துள்ளார். ராவல்பிண்டி தலைமையகத்தில் நடந்த ஒரு நிகழ்சியில் அவர் பேசியது இப்போது பரவலாக விவாதிக்கப்படுகிறது.
அங்கு அவர் பேசிய அவர், மூடநம்பிக்கை, தெய்வீக தலையீட்டை வெளிப்படுத்தினார். இந்திய இராணுவத்தின் அழுத்தம் உச்சத்தில் இருந்தபோது, பாகிஸ்தான் இராணுவம் அல்லாஹ்வின் உதவியால் காப்பாற்றப்பட்டது என்று அவர் கூறினார்.
பாகிஸ்தான் ஊடகம் வெளியிட்ட வீடியோவில் இந்தியாவுடனான ஆபரேஷன் சிந்தூர் மோதலைக் குறிப்பிடும்போது முனீர் மத அடையாளங்களை பயபடுத்தி பேசினார். ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் இந்தத் தாக்குதல் நடந்தது. இதைத் தொடர்ந்து, மே 7 ஆம் தேதி பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையைத் தொடங்கியது. இந்த நாட்களில் இரு நாடுகளுக்கும் இடையே பதட்டங்கள் அதிகரித்தன. இது மே 10 ஆம் தேதி போர் நிறுத்தம் ஏற்பட்டது.
முனீர் பேசியுள்ள அண்த வீடியோவில்,"மே மாதத்தில், எதிரி இந்தியா தனது அனைத்து வளங்கள், தொழில்நுட்பத்தால் நம்மை மூழ்கடிக்க முயன்றபோது, உலக தர்க்கம் தோல்வியடைந்தது. அந்த நேரத்தில் நிலைமை எந்த இராணுவ கணக்கீடுகளாலும் உயிர்வாழ்வது சாத்தியமற்றது.
ஆனால், இன்று நான் இதை பதிவு செய்கிறேன். அல்லாஹ்வின் உதவி அங்கு வருவதை நாங்கள் கண்டோம். அந்த உதவியை நாங்கள் உணர்ந்தோம். இது எங்கள் வீரர்களின் மன உறுதியை உடைக்காமல் பாதுகாத்து எதிரியின் திட்டங்களை முறியடித்த ஒரு தெய்வீக தலையீடு அது. இந்த வெற்றி ஆயுதங்களை விட, நம்பிக்கையின் சக்தியால் ஏற்பட்டது. ஏனெனில் எதிரி தொழில்நுட்பத்தில் மிக உயர்ந்தவர். அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்தால், உங்களை யாராலும் தோற்கடிக்க முடியாது" என குர்ஆனில் இருந்து ஒரு வசனத்தை மேற்கோள் காட்டினார்
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக மே மாத தொடக்கத்தில் இந்தியா ஆபரேஷன் சிந்தூரைத் தொடங்கியது. இதில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த நடவடிக்கையின் போது, இந்திய விமானப்படை பாகிஸ்தான், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் அமைந்துள்ள பல பயங்கரவாத தளங்களைத் தாக்கியது. இதைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே பதட்டங்கள் அதிகரித்தன.
