Asianet News TamilAsianet News Tamil

வாஜ்பாய் இறந்து விட்டாரா? திரிபுரா ஆளுநரால் சர்ச்சை!!!

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் இறந்து விட்டதாகவும் அதற்கு தனது இரங்கல்களை தெரிவிப்பதாகவும் திரிபுரா ஆளுநர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tripura Governor Tathagata Roy announces Vajpayee is dead tweet
Author
Tripura, First Published Aug 16, 2018, 1:38 PM IST

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் இறந்து விட்டதாகவும் அதற்கு தனது இரங்கல்களை தெரிவிப்பதாகவும் திரிபுரா ஆளுநர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வாஜ்பாய் (93) உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஜூன் மாதம் 11-ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிறுநீரக குழாய் நோய்த்தொற்று மார்பு வலி உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் இருந்ததால் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Tripura Governor Tathagata Roy announces Vajpayee is dead tweet

அவர் தீவிரமாக மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்து வருகின்றனர். இதனையடுத்து வாஜ்பாயின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக எய்ம்ஸ் மருத்துவமனையில் அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும் அவருக்கு உயிர்காக்கும் கருவிகள் பொருத்தப்பட்டிப்பதாகவும் எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. Tripura Governor Tathagata Roy announces Vajpayee is dead tweet

இந்நிலையில் வாஜ்பாய் இறந்துவிட்டதாக திரிபுரா மாநில ஆளுநர் தத்தகட்டா ராய் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார். மருத்துவமனையிலிருந்தோ அரசிடமிருந்தோ எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகாத நிலையில் அவரது ட்விட்டர் பதிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் தனது ட்விட்டர் பதிவுக்கு திரிபுரா ஆளுநர் மன்னிப்பு கேட்டுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios