அதிமுக பெண் எம்பி சசிகலா புஷ்பாவுடன் மோதி பெரும் பரபரப்புக்குள்ளான திமுக உறுப்பினர் திருச்சி சிவா இன்று அதிமுக எம்பி விஜிலா சத்யானந்துடன் மோதினார்.
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட சசிகலா புஷ்பாவுடன் புகைப்படத்தில் இருப்பது போல் ப்ரபரப்புக்குள்ளான திருச்சி சிவா எம் பி , பின்னர் விமான நிலையத்தில் சசிகலா புஷ்பாபவால் தாக்கப்பட்டார். அதன் பின்னர் எழுந்த பிரச்சனையில் சசிகலா புஷ்பா அதிமுக தலைமைக்கு எதிராக பேச கட்சியை விட்டு வெளியேற்றப்பட்டார்.

இந்நிலையில் சேலம் உருக்காலையையை தனியாருக்கு தாரை வார்க்கும் மத்திய அரசின் முடிவை எதிர்த்து திருச்சி சிவா ஆதாரங்களுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென அவருக்கு அருகில் அமர்ந்திருந்த அதிமுக உறுப்பினர் விஜிலா சத்யானந்த் எழுந்து ஆவேசத்துடன் தன் கையிலிருந்த பேப்பரை வைத்து சேலம் உருக்காலை பற்றி குறுக்கிட்டு பேசினார்.
இதை பார்த்து கடுமையாக ஆத்திரமடைந்த திருச்சி சிவா எதற்கு என் பேச்சில் குறுக்கிட வேண்டும் இங்கு என்னதான் நடக்கிறது என்று கேட்டார். ஆனால் அதை அலட்சியம் செய்து விஜிலா பேசிக்கொண்டே இருந்தார். அவரை அமரும் படி மாநிலங்களவை தலைவர் வலியுறுத்தினார்.

ஆனால் அவர் அமராமல் பேசிக்கொண்டே இருந்தார். இதை பார்த்த அவைத்தலைவர் பெண் உறுப்பினர் நீங்களே இவ்வாறு பேசலாமா என்று கேட்டார். அதென்ன என்னை பெண் உறுப்பினர் என்று கூறுகிறீர்கள் என்று அவரிடம் விஜிலா மோதினார். இதை பார்த்து திடுக்கிட்ட அவைத்தலைவர் நான் சாதரணமாக கூறினேன் நீங்கள் வேறு அர்த்தம் எதையும் எடுக்காதீர்கள் என்று கூறினார்.
பின்னர் மாநிலங்களவை அதிமுக தலைவர் நவநீத கிருஷ்ணனை அழைத்து உங்கள் உறுப்பினரை நீங்கள் தான் கட்டுபடுத்த வேண்டும் என்று கேட்டு கொண்டார். அதன் பின்னர் நவநீத கிருஷ்ணன் விஜிலாவை உட்கார வைத்தார். அதன் பின்னர் திருச்சி சிவா தனது பேச்சை துவக்கினார்.
