நரிக்குறவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கும் அரசியல் சாசன திருத்த மசோதா… மக்களவையில் நிறைவேற்றம்!!
தமிழகத்தில் உள்ள நரிக்குறவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கும் அரசியல் சாசன திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
தமிழகத்தில் உள்ள நரிக்குறவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கும் அரசியல் சாசன திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக நரிக்குறவர் மற்றும் குருவிக்காரர்கள் சமூகத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க நீண்ட காலமாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த மார்ச் 19 ஆம் தேதி பிரதமர் மோடிக்கு இதுத்தொடர்பாக கடிதம் எழுதியிருந்தார்.
இதையும் படிங்க: கள்ளக்குறிச்சி மாணவி பயன்படுத்திய செல்போனை போலீசில் ஒப்படைக்க வேண்டும்… பெற்றோருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!!
அதில், 1967 ஆம் ஆண்டே நாடாளுமன்றத்தின் கூட்டுக்குழுவானது இந்த பிரிவினர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று பரிந்துரைத்திருந்து. இருந்த போதிலும், பல ஆண்டுகளாக நிறைவேறாமல் இருப்பதை சுட்டிக் காட்டியிருந்தார். இந்த நிலையில் நரிக்குறவர் மற்றும் குருவிக்காரர்கள் பிரிவினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மத்திய அமைச்சரவை கடந்த செப்டம்பரில் ஒப்புதல் வழங்கியது. அதை தொடர்ந்து பழங்குடியினர் அரசியல் சாசன சட்ட திருத்த மசோதா நடப்பு குளிர்கால கூட்டத்தொடரில் கொண்டுவரப்பட்டது.
இதையும் படிங்க: இளைஞர்களிடம் முதலீடு செய்வதாக கூறி பண மோசடி… கோவை கார் குண்டு வெடிப்பில் தொடர்பு இருப்பதாக கூறியதால் பரபரப்பு!
அதற்கான அரசியல் சாசன திருத்த மசோதாவை நேற்று முன்தினம் மத்திய பழங்குடியின நலத்துறை அமைச்சர் அர்ஜீன் முண்டா மக்களவையில் அறிமுகம் செய்தார். இந்த நிலையில், பழங்குடியினர் அரசியல் சாசன திருத்த மசோதா மக்களவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்மூலம், பழங்குடியினருக்கு வழங்கப்படும் சலுகைகள் அனைத்தும் நரிக்குறவர் - குருவிக்காரர் பிரிவினருக்கும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.