புத்தர் தவமிருந்து ஞானம் பெற்றதாக, புத்த மதத்தினரால் நம்மப்படும் போதி மரத்திற்கு நோய்தொற்று ஏற்பட்டுள்ளதால், அதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பீகார் மாநிலம், கயாவில் மகா போதி ஆலயத்தில் போதி மரத்திற்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, டேராடூன் வன ஆராய்ச்சி நிறுவனத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் இங்கு ஆய்வு செய்தனர். 

விஞ்ஞானிகளின் ஆய்வை அடுத்து, போதி மரத்துக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், இதற்கு சிகிச்சை அளிக்கவும் அவர்கள் முடிவு செய்தனர்.

நோய்த்தொற்றுக்காக, உரம் மற்றும் நுண்ணூட்டச் சத்துக்கள் கொண்ட மருந்து தெளித்து போதி மரத்துக்கு சிகிச்சை அளிக்க முடிவு செய்தனர். 

தண்ணீருடன், உரம் மற்றும் நுண்ணூட்டச் சத்துக்கள் கலந்து, நோய்த்தொற்று உள்ள பகுதிகளில் பீய்ச்சி அடிக்கப்படுகின்றன.

விஞ்ஞானிகளின் இந்த முயற்சியை அடுத்து, போதி மரத்தின் பாதிக்கப்பட்ட பகுதிகள் சீரடைந்து வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.