Asianet News TamilAsianet News Tamil

கார்களில் ‘பம்பர்’ பொருத்தினால் ரூ.5 ஆயிரம் அபராதம் மத்திய அரசு அதிரடி உத்தரவு

Transport Ministry plans to ban crash guards on cars says it poses threat to driver and pedestrians
Transport Ministry plans to ban crash guards on cars, says it poses threat to driver and pedestrians
Author
First Published Dec 21, 2017, 8:30 PM IST


கார்கள், இரு சக்கர வாகனங்களில் அங்கீகாரமற்ற வகையில் ‘பம்பர்’ அல்லதுகிராஷ் கார்டு  பொருத்தினால், ரூ.5 ஆயிரம் வரை அபராதம் விதிக்க மாநில அரசுகளை கேட்டுக்கொண்டுள்ளது மத்திய அரசு. 

சாலையில் பாதசாரிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த முடிவை மத்திய அரசு எடுத்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. 1988ம் ஆண்டு, மோட்டார் வாகனச் சட்டத்தின்படி முதல் முறையாக இந்த பம்பர்களை பொருத்தினால், ரூ.ஆயிரமும், 2-வது முறையாக பிடிபட்டால் ரூ.2 ஆயிரமும், மூன்றாவது முறையாக ரூ.5 ஆயிரமும் அபராதமும் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

இது குறித்து மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறையின் முதன்மைச் செயலாளர்கள், மாநிலத்தின் போக்குவரத்து செயலாளர்கள், ஆணையர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது- 
1988ம் ஆண்டு மோட்டார் வாகனச் சட்டத்தின்படி, வாகனங்களில் ‘பம்பர்’, கிராஷ்கார்டு, புல்பார் போன்றவற்றை அனுமதியின்றி அங்கீகாரமற்ற முறையில் பொருத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு பொருத்தினால், மோட்டார் வாகனச்சட்டம் 190, 191ன் கீழ் அபராதம் விதிக்கப்படும். வாகனங்கள், கார்களில்பம்பர், கிராஷ் கார்டு, புல் பார்கள் பொருத்தவதால், சாலையில் நடந்து செல்லும் மக்களுக்கும், விபத்துகளின் போது, வாகனத்தை இயக்குபவர்களுக்கும் உயிர்சேதத்தை வரவழைக்கும் இதைத் தடுக்கவே இது தடைசெய்யப்படுகிறது.

இது தொடர்பாக அனைத்து மாநில அரசுகளும், தங்கள் மாநிலத்தில் அங்கீகாரமற்ற வகையில், அனுமதி இல்லாமல் கிராஷ்கார்டு, புல்பார் பொருத்தி இருந்தால், அபராதம் விதிக்கலாம். முதல்முறையாக கண்டுபிடிக்கும்போது ரூ.1000, 2-வது முறையாக ரூ.2 ஆயிரம், 3-வது முறையாக தவறு செய்தால் ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios