Asianet News TamilAsianet News Tamil

அக்னிபாத் திட்டத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு... பீகார், உ.பி. செல்லும் ரயில்கள் ரத்து!!

அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்புகள் வலுக்கும் நிலையில் பிகார், உத்தரப்பிரதேச மாநிலங்களுக்குச் செல்லும் ரயில்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

trains to bihar and uttar pradesh temporarily canceled due to agnipath protest
Author
India, First Published Jun 17, 2022, 7:13 PM IST

அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்புகள் வலுக்கும் நிலையில் பிகார், உத்தரப்பிரதேச மாநிலங்களுக்குச் செல்லும் ரயில்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ராணுவம், கடற்படை, விமானப் படை ஆகியவற்றில் 17.5 வயதில் இருந்து 23 வயதுக்கு உள்பட்டவா்களை ஒப்பந்த அடிப்படையில் நான்காண்டு பணிக்குச் சோ்த்துக் கொள்ளும் அக்னிபத் திட்டத்தை பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் செவ்வாய்க்கிழமை அறிமுகப்படுத்தினாா். முப்படைகளின் தலைமைத் தளபதிகள் முன்னிலையில் அறிமுகம் செய்யப்பட்ட இந்தத் திட்டத்தின் கீழ் சோ்க்கப்படும் வீரா்களில் பெரும்பாலானோருக்கு 4 ஆண்டுகளுக்குப் பிறகு கட்டாய ஓய்வு அளிக்கப்படும். அவா்களுக்கு பணிக்கொடை, ஓய்வூதியப் பலன்கள் எதுவும் கிடைக்காது. இத்திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து, பிகாரில் ராணுவத்தில் சோ்வதற்காகப் பயிற்சி பெற்று வந்த ஏராளமான இளைஞா்கள் புதன்கிழமை முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

trains to bihar and uttar pradesh temporarily canceled due to agnipath protest

மூன்றாவது நாளான இன்றும் அவா்களின் போராட்டம் தொடா்ந்தது. அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ரயில் எரிப்பு உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. பரவலான போராட்டம், தீவைப்புச் சம்பவங்கள், ரயில் நிலையங்கள் சூறையாடுதல் போன்ற வன்முறைச் சம்பவங்களால், ஏற்கனவே இந்த ஊர்களுக்கு இயக்கப்பட்ட ரயில்களும், அந்த ஊர்களுக்கு முன்னதாகவே நிறுத்தப்படும் என்றும் தெற்கு ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முப்படைகளில் தற்காலிக அடிப்படையில் ராணுவ வீரா்களைச் சோ்க்கும் அக்னிபத் திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து பல்வேறு மாநிலங்களில் மூன்றாவது நாளாக நடந்த போராட்டங்கள் காரணமாக, நாடு முழுவதும் சுமார் 200 ரயில்களின் சேவை இன்று பாதிக்கப்பட்டது.

trains to bihar and uttar pradesh temporarily canceled due to agnipath protest

இந்த நிலையில், ரயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அக்னிபத் திட்டத்துக்கு எதிராக ரயில்களுக்கு தீ வைப்பு மற்றும் ரயில் நிலையங்களில் கல்வீச்சு சம்பவங்களால் நாடு முழுவதும் 200 ரயில்களின் சேவைகள் பாதிக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே பீகாரில் பாஜக நிர்வாகிகளின் வீடுகள் மீது போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். பிகார் துணை முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான ரேணுதேவியின் வீட்டில் கார்களை போராட்டக்காரர்கள் சேதப்படுத்தினர்.  பெட்டியாவில் பாஜக தலைவர் சஞ்சய் ஜெய்ஷ் வீட்டிலும் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த நிலையில் தான் பீகார், உத்தரப்பிரதேச மாநிலங்களுக்குச் செல்லும் ரயில்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios