ஒருத்தருக்கு 11,230 ரூபாயா! சுவிதா எக்ஸ்பிரஸ் ரயில்களில் டிக்கெட்டுக்கு டைனமிக் கட்டண முறை மாறுமா?

டிசம்பர் 8ஆம் தேதி வரை மும்பை-பாட்னா சுவிதா எக்ஸ்பிரஸ் ரயிலில் 2 டயர் ஏசி டிக்கெட் விலை ரூ.9,395. பிப்ரவரி 3 வரை, ஜெய்ப்பூர்-யஸ்வந்த்பூர் சுவிதா எக்ஸ்பிரஸ் ரயிலில் 2 டியர் ஏசி டிக்கெட் விலை ரூ.11,230.

Train Ticket Fare: Jaipur-Bengaluru Tickets for Rs 11,230 Forces Price Review sgb

சுவிதா எக்ஸ்பிரஸ் ரயில்களில் கட்டணம் வரலாறு காணாத அளவகுகு உயர்ந்ததால், பிரீமியம் எக்ஸ்பிரஸ் ரயில்களில் டைனமிக் கட்டண முறையை இந்திய ரயில்வே மறுபரிசீலனை செய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், கட்டண முறை மாற்றம் எப்போது அமலுக்கு வரும் என்று எந்தத் தகவலும் இல்லை.

தீபாவளிப் பண்டிகையை ஒட்டி ஜெய்ப்பூர்-யஷ்வந்த்பூர் வழித்தடத்தில் இயக்கப்படும் சுவிதா எக்ஸ்பிரஸ் ரயிலில் 2 டயர் ஏசி பெர்த் டிக்கெட் கட்டணம் ரூ.11,230 ஆக உயர்ந்தது. மும்பை-பாட்னா சுவிதா எகஸ்பிரஸ் ரயிலில் டிக்கெட் கட்டணம் ரூ.9,395 அளவுக்கு அதிகரித்தது.

இதனால், பிரீமியம் சுவிதா ரயில்களுக்கான தற்போதைய டைனமிக் கட்டண முறையைக் கைவிட ரயில்வே திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அடிப்படைக் கட்டணம் டைனமிக் முறையில் 300 சதவீதம் அளவுக்கு உயர்கிறது. இது விமான டிக்கெட் விலையை விட மிக அதிகமாக இருப்பதால், வரும் நாட்களில் இந்தக் கட்டணம் குறைக்கப்படலாம் என்று தெரிகிறது.

ராமேஸ்வரத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள புதிய பாம்பன் பாலம்! விரைவில் திறப்பு விழா!

Train Ticket Fare: Jaipur-Bengaluru Tickets for Rs 11,230 Forces Price Review sgb

சுவிதா பிரீமியம் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை 2014ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அதிகப்படியான கட்டணங்கள் குறித்து பயணிகள் புகார் செய்யத் தொடங்கியதை அடுத்து சுவிதா எக்ஸ்பிரஸ் சேவை குறைக்கப்பட்டுள்ளது.

தற்போதைய நிலவரப்படி, இரண்டு சுவிதா எக்ஸ்பிரஸ் ரயில்கள் மட்டுமே மும்பை-பாட்னா மற்றும் ஜெய்ப்பூர்-யஷ்வந்த்பூர் ஆகிய வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன. மும்பை-பாட்னா ரயில் வாரத்திற்கு இரண்டு முறை இயக்கப்படுகிறது. ஜெய்ப்பூர்-யஷ்வந்த்பூர் ரயில் வாரம் ஒரு முறை இயங்குகிறது.

ஐஆர்சிடிசி (IRCTC) அதிகாரப்பூர்வ இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களின்படி, டிசம்பர் 8ஆம் தேதி வரை மும்பை-பாட்னா சுவிதா எக்ஸ்பிரஸ் ரயிலில் 2 டயர் ஏசி டிக்கெட் விலை ரூ.9,395. பிப்ரவரி 3 வரை, ஜெய்ப்பூர்-யஸ்வந்த்பூர் சுவிதா எக்ஸ்பிரஸ் ரயிலில் 2 டியர் ஏசி டிக்கெட் விலை ரூ.11,230.

பண்டிகைக் கூட்ட நெரிசலை சமாளிக்க இந்திய ரயில்வே கூடுதல் ரயில்களை இயக்கியுள்ளது. அக்டோபர் 1 முதல் 2,423 சிறப்பு ரயில்களை இந்திய ரயில்வே இயக்கியுள்ளது. இவற்றில் சுமார் 36 லட்சம் பயணிகள் பயணித்துள்ளனர்.

உ.பி.யில் ஹலால் சான்றிதழ் கொண்ட உணவுப் பொருட்களுக்கு தடை! யோகி அரசு அதிரடி உத்தரவு

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios