Asianet News TamilAsianet News Tamil

Kannur Train fire : கண்ணூரில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ரயிலில் தீ! நாச வேலை காரணமா ரயில்வே விசாரணை!

கேரள மாநிலம் கண்ணூரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் தீபற்றி எரிந்தது. பல மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மர்ம நபர்கள் ரயிலின் ஒரு பெட்டிக்கு தீ வைத்திருக்கலாம் என்ற கோணத்தில் என ரயில்வே அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Train set on fire at Kannur railway station
Author
First Published Jun 1, 2023, 9:20 AM IST

கேரள மாநிலம் கண்ணூரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் தீபற்றி எரிந்தது. பல மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மர்ம நபர்கள் ரயிலின் ஒரு பெட்டிக்கு தீ வைத்திருக்கலாம் என்ற கோணத்தில் என ரயில்வே அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

கேரள மாநிலம் கண்ணூர் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயிலின் ஒரு பெட்டியில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இன்று நள்ளிரவு 1:25 மணிக்கு, இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. ரயில் நிலையத்தின் மூன்றாவது நடைமேடை அருகே ஆலப்புழா-கண்ணூர் எக்ஸிகியூட்டிவ் எக்ஸ்பிரஸ் ரயில் 8வது யார்டில் நிறுத்தப்பட்டிருந்தது. தீவிபத்துக்குள்ளான ரயிலும் இதுதான்.

மர்ம நபர்கள் தீவைப்பா..?

நின்றிருந்த ரயிலின் தீ பெட்டிக்கு மர்ம நபர்கள் தீ வைத்திருக்கலாம் என்ற அடிப்படையில் ரயில்வேதுறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 3 தீயணைப்பு படை வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இருந்த போதிலும் தீவிபத்துக்குள்ளான ரயில் பெட்டி முற்றிலும் எரிந்து நாசமானது. நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் என்பதால் பயணிகள் யாரும் இல்லாததால் உயிரிழப்பு ஏதும் இல்லை.

ஏற்கனவே எரிந்ததும் இதே ரயில்..

ஆலப்புழாவில் இருந்து கடந்த ஏப்ரல் மாதம் 2ம் தேதி இரவு கண்ணூருக்கு சென்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த 3 பயணிகள், சக பயணி ஒருவரால் தீவைத்து எரித்துக் கொல்லப்பட்டனர். இந்த விபத்தில் 9 பேர் பலத்த தீக்காயம் அடைந்தனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாகக் கூறி ஷாருக் சைபி என்ற இளைஞரை மகாராஷ்டிர மாநிலத்தில் கைது செய்து போலீஸார் சிறையில் அடைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஷாருக் சைபி எரித்த ரயில் பெட்டியில்தான் தற்போதும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த ரயில் எரிப்பு சம்பவம் குறித்து தேசிய புலனாய்வு முகமை (NIA) ஏற்கனவே விசாரணை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
 

 

Follow Us:
Download App:
  • android
  • ios