Train passengers may have to shell out more as Railways is mulling increasing fares

பயணிகள் ரெயில் கட்டணம் வரும் ஜூன் மாதத்தில் இருந்து 10 முதல் 12 சதவீதம் வர உயர்த்தப்படலாம் என மத்தியஅரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அவ்வாறு கட்டணம் உயர்த்தப்பட்டால், பிரதமர் மோடி தலைமையிலான அரசு பதவி ஏற்று 3 ஆண்டுகளுக்கு பின் 2-வது ரெயில் பயணிகள் கட்டணம் உயர்வாகும்.

கடந்த 2014ம் ஆண்டு மோடி அரசு பதவி ஏற்றவுடன் ரெயில்வே அமைச்சர் சதானந்த கவுடா ஜூன் 16-ந்தேதி ரெயில் கட்டண உயர்வை அறிவித்தார். அப்போது பயணிகள்ரெயில் கட்டணம் 14.2 சதவீதமும், சரக்கு ரெயில் கட்டணமும் 6.5 சதவீதமும் உயர்த்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அதன்பின் கடந்த 3 ஆண்டுகளாக ரெயில்வே பட்ஜெட்டில் சரக்கு, பயணிகள் கட்டணம் உயர்த்தப்படவில்லை. இதற்கிடையே நடப்பு ஆண்டு பட்ெஜட்டில் இருந்துரெயில்வே பட்ஜெட், பொது பட்ஜெட்டுடன் இணைக்கப்பட்டது.

மேலும், புதிய ரெயில்கள் ஏதும் பட்ஜெட்டில் அறிவிக்கப்படாத நிலையில், பயணிகளுக்கு வசதிகளை அதிகப்படுத்தும் திட்டங்களை நிதி அமைச்சர் அருண்ஜெட்லி அறிவித்தார். இதற்கிடையே 7-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளும் நடைமுறைக்கு வந்துள்ளது. இதற்காக கூடுதலாக ரூ.8 ஆயிரம் கோடி செலவாகும் எனத் தெரிகிறது.

மேலும், ரெயில்வே துறை தனது திட்டங்களை நிறைவேற்றிக் கொள்ளவும், பாதுகாப்பு அம்சங்களை வலுப்படுத்திக்கொள்ளவும் சுயமாக நிதியை ெபருமளவுதிரட்டிக்கொள்ள மத்திய அரசு அறிவறுத்தியது. அதற்கு ஏற்றார்போல், சிறப்பு ரெயில்பாதுகாப்பு நிதியை உருவாக்கியது.

இந்நிலையில், ரெயில்வே துறையில் பல திட்டங்களை செயல்படுத்தவும், பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்தவும் நிதி தேவைப்படுகிறது. ஆதலால், ஜூன் மாதம் பயணிகள்ரெயில் கட்டணத்தை அதிகபட்சமாக 12 சதவீதம் வரை உயர்த்தும் பட்சத்தில்ரெயில்வே துறைக்கு ரூ.5 ஆயிரம்கோடி வரை வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், ஜூலை மாதம் முதல் ஜி.எஸ்.டி. வரி நடைமுறைக்கு வருகிறது. இதில் சேவை வரி 18சதவீதம் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்குமுன்பாகவே ரெயில் பயணிகள் கட்டணத்தை உயர்த்தும் நோக்கில் அரசு திட்டமிட்டுள்ளது.

இந்த கட்டண உயர்வு மூலம் கிடைக்கும் நிதியை வைத்து, புதிய ரெயில்இருப்புப்பாதைகள், திட்டங்களையும் தொடங்க ரெயில்வே திட்டமிட்டுள்ளது.

இதற்கிடையே கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வி.ஐ.பி.க்கள் பயணம் செய்யும்,ராஜ்தானி, சதாப்தி, துரந்தோ ஆகிய ரெயில்களின் கட்டணம் சத்தமில்லாமல் உயர்த்தப்பட்டது. இதனால், 2-ம் வகுப்பு ஏ.சி. பிரிவில் பயணிக்கும் பயணிகள் எண்ணிக்கை திடீரெனக் குறைந்தது.

அதேசமயம், ரெயில் பயணக் கட்டணமும், விமானக் கட்டணமும் சிறிய வேறுபாடு அளவுக்கு வந்ததையடுத்து, பயணிகள் விமானப்பயணத்துக்கு மாறிவருகின்றனர். இந்நிலையில், இந்த ‘பிளக்சி பேர்’ கட்டண முறையும் திரும்பப் பெறவும் ரெயில்வேதிட்டமிட்டுள்ளது.