இது பண்டிகைகளின் மாதம். இந்த பண்டிகைகள் வெறும் நம்பிக்கையை மட்டுமல்ல. வீடு திரும்புவதற்கான ஏக்கத்தையும் குறிக்கின்றன. மண்ணின் வாசனை, குடும்பத்தின் பாசம், கிராம வாழ்க்கையின் அரவணைப்பு, ஆனால் இந்த ஏக்கம் இப்போது ஒரு போராட்டமாக மாறிவிட்டது

பண்டிகை காலங்களில் மத்திய அரசு 12,000 சிறப்பு ரயில்களை இயக்குவதாக அறிவித்தது. வீடு திரும்புவதில் யாருக்கும் எந்தப் பிரச்சினையும் இருக்காது என்று கூறப்பட்டது. ஆனாலும், இப்போதெல்லாம் ரயில்களில் நிற்க இடம் கூட கிடைக்காமல் மக்கள் சிரமப்படுகிறார்கள். பல நிலையங்களில், மக்கள் நீண்ட வரிசையில் நிற்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இந்தப் பிரச்சினைகள் தொடர்பாக எதிர்க்கட்சிகள் அரசை கடுமையாகத் தாக்கி வருகின்றன. லாலு யாதவைத் தொடர்ந்து, ராகுல் காந்தியும் இதுகுறித்து கேள்விகளை எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து எக்ஸ்தளத்தில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, ‘‘இது பண்டிகைகளின் மாதம். இந்த பண்டிகைகள் வெறும் நம்பிக்கையை மட்டுமல்ல. வீடு திரும்புவதற்கான ஏக்கத்தையும் குறிக்கின்றன. மண்ணின் வாசனை, குடும்பத்தின் பாசம், கிராம வாழ்க்கையின் அரவணைப்பு, ஆனால் இந்த ஏக்கம் இப்போது ஒரு போராட்டமாக மாறிவிட்டது.

பீகாருக்கான ரயில்கள் போதுமான அளவு நிரம்பியுள்ளன. டிக்கெட்டுகள் எளிதில் கிடைப்பதில்லை. பயணம் மனிதாபிமானமற்றதாகிவிட்டது. பல ரயில்களளில் அளவுக்கு அதிகமாக 200% வரை பயணிக்கின்றன. மக்கள் கதவுகளிலும், கூரைகளிலும் தொங்கிக் கொண்டு இருக்கிறார்கள்.

12,000 சிறப்பு ரயில்கள் எங்கே? ஒவ்வொரு ஆண்டும் நிலைமை ஏன் மோசமடைகிறது? பீகார் மக்கள் ஏன் இத்தகைய அவமானகரமான சூழ்நிலையில் ஒவ்வொரு ஆண்டும் வீடு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்? அவர்களுக்கு மாநிலத்தில் வேலைவாய்ப்பும், மரியாதைக்குரிய வாழ்க்கையும் இருந்திருந்தால், அவர்கள் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தூரம் அலைய வேண்டியதில்லை. இவர்கள் வெறும் உதவியற்ற பயணிகள் மட்டுமல்ல, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வஞ்சகக் கொள்கைகள், நோக்கங்களுக்கு வாழும் சான்றுகள். பாதுகாப்பான, மரியாதைக்குரிய பயணம் என்பது ஒரு உரிமை, ஒரு சலுகை அல்ல’’ என்று ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.