ரயில்வே நிர்வாகத்திற்கு 35 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதால் அதை சரிகட்ட ரயில் கட்டணத்தை உயர்த்த  நாடாளுமன் குழு பரிந்துரை செய்துள்ளது.

சாதாரண ஏழை எளிய மக்கள் பயன்படுத்த முடியாத அளவுக்கு பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.  இந்நிலையில் பொது மக்களுக்கு பெரும் வரப் பிரசாதமாக அமைந்திருப்பது ரயில்கள் தான்.

கிட்டத்தட்ட பேருந்து கட்டணத்தில் பாதி அளவுதான் ரயில் கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருகின்றன. அதனால் தால் ரயில்களில் பயணம் செய்ய பொது மக்கள் கூட்டம்  அலைமோதுகிறது. இந்த ஏழை-எளிய மக்களின் எண்ணத்தில் மண்ணைப் போட முயற்சி செய்து வருகிறது ரயில்வே துறை.

இந்நிலையில் ரயில் கட்டணத்தை  கடந்த  15 ஆண்டுகளாக உயர்த்தாததால், ரெயில்வே துறைக்கு 35 ஆயிரம் கோடி ரூபாய்  இழப்பு ஏற்பட்டுள்ளதாக ரெயில்வே வாரியம்  நாடாளுமன்ற கூட்டுக்குழுவிடம் தெரிவித்திருந்து.

இதையடுத்து நாடு முழுவதும் ரயில்வே துறை தொடர்பாக நாடாளுமன்ற குழு ஆய்வு செய்தது. இதையடுத்து . இந்த நஷ்டத்தை கருத்தில்கொண்டு, ரயில்வே நிர்வாகம் படிப்படியாகவோ அல்லது அவ்வப்போதோ கட்டணத்தை நியாயமான அளவுக்கு உயர்த்த வேண்டும் என்றும்,  வருவாயை பெருக்க வேறு வழிமுறைகளையும் கையாள வேண்டும் என்றும் நாடாளுமன்ற குழு பரிந்துரைத்துள்ளது..

மேலும், சிறப்பு கட்டண ரயில்கள் மூலம் கிடைக்கும் வருவாயை ரயில்வே நிர்வாகம் தனியாக மதிப்பிட வேண்டும் என்றும் அந்தக்குழு தெரிவித்துள்ளது. இதையடுத்து ரயில் கட்டணம் விரைவில் உயர்த்தப்படவுள்ளது.