உத்தரப்பிரதேச ரெயில் விபத்தில் சிக்கிய மணப்பெண், தனது தந்தையைத் தேடி அலைந்த கொடுமை அனைவரின் மனதையும் உருக்கியது.
ரெயில் விபத்தில் சிக்கியதில், உ.பி. மாநிலம் ஆசாம்கார் மாவட்டத்தை சேர்ந்த ரூபி குப்தாவும் (வயது 20) ஒருவர். ரூபிக்கு டிசம்பர் ஒன்றாம் தேதி திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு உள்ளது.
திருமணத்திற்காக தந்தை மற்றும் உடன் பிறந்தவர்கள் நால்வருடன் அவர் சென்று உள்ளார். விபத்தில் சிக்கிய ரூபியின் கைகளில் காயம் ஏற்பட்டு உள்ளது. அவருடைய சகோதர, சகோதரிகளும் (அர்ச்சனா, குஷி, அபிஷேக் மற்றும் விஷால்) காயம் அடைந்து உள்ளனர்.

ரூபி பேசுகையில், “என்னுடைய தந்தையை நான் இதுவரையில் கண்டுபிடிக்கவில்லை, நான் எல்லா பகுதியிலும் தேடிவிட்டேன். சிலர் மருத்துவமனைகளில் தேடும்படி கூறுகிறார்கள், என்ன செய்வது என்று தெரியாமல் உள்ளேன்,” என்றார். திருமணத்திற்கு வாங்கிய பொருட்களையும் அவர் இழந்துவிட்டார்,

தன்னுடைய தந்தை எங்கிருக்கிறார் என்று அவர் பரிதவிப்புடன் தேடிவருகிறார். ‘‘என்னுடைய திருமணம் திட்டமிட்டபடி நடைபெறுமா என்பது கூட எனக்கு தெரியாது. என்னுடைய தந்தை எனக்கு வேண்டும்.
நான் எல்லாப் பகுதிக்கும் சென்று அழைத்தேன், ஆனால் அவரிடம் இருந்து பதில் கிடைக்கவில்லை, எனக்கு இப்போது என்ன செய்வது என்று தெரியவில்லை’’ என்று ரூபி கூறி இருக்கிறார்.
