உத்தரப்பிரதேசத்தில் நடந்த ரயில் விபத்தில் 133 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கு குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி வருத்தமும், இரங்கலும் தெரிவித்துள்ளார்.
கான்பூர் அருகே அதிவிரைவு ரயில் பெட்டிகள் தடம் புரண்டதால் ஏராளமானவர்கள் உயிரிழந்த தகவல் அறிந்து வேதனை அடைந்தேன். விபத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்குத் தேவையான உதவிகளையும், காயமடைந்தவர்களுக்குத் தேவையான மருத்துவ வசதிகளையும் உத்தரப்பிரதேச அரசு அளிக்கும். இந்தப் பேரிழப்பைத் தாங்கிக் கொள்ளும் மன வலிமையை உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அளிக்குமாறு இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
