உத்தரப்பிரதேச மாநிலம் ராம்பூரில் மீரட் லக்னோ விரைவு ரயிலின் 8 பெட்டிகள் தடம்புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளது. 

சுமார் ஆயிரத்திற்கும் அதிகமான பயணிகளுடன் மீரட் லக்னோ ராஜ்ய ராணி விரைவு ரயில் மீரட்டில் இருந்து இன்று அதிகாலை 4.55 மணிக்கு கிளம்பியது. 

மொரதாபாத்தை தாண்டி ராம்பூர் அருகே வந்து கொண்டிருந்த போது, ரயிலின் 8 பெட்டிகள் திடீரென தடம்புரண்டது. இந்த விபத்தில் சிலருக்கு காயம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இதுவரை தெரிவிக்கப்படவில்லை. காயம்பட்டவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.