அகில இந்திய வானொலி என்பதற்கு பதிலாக ஆகாஷ்வாணி என இந்தியில் பயன்படுத்த தொடங்கியதற்கு திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு கண்டனம் தெரிவித்துள்ளார்.
அகில இந்திய வானொலி என்பதற்கு பதிலாக ஆகாஷ்வாணி என இந்தியில் பயன்படுத்த தொடங்கியதற்கு திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு கண்டனம் தெரிவித்துள்ளார். முன்னதாக அகில இந்திய வானொலியின் அறிவிப்புகள், செய்திகள் மற்றும் அலுவல் சார்ந்த கடிதங்களில், இனி ஆல் இந்தியா ரேடியோ என்று பயன்படுத்தக்கூடாது என்றும், அதற்கு மாற்றாக ஆகாஷ்வாணி என்று தான் பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் வானொலி நிலையங்களுக்கு ஆணையிடப்பட்டது.
இதையும் படிங்க: நீரில் மூழ்கிய சுற்றுலாப் படகு... குழந்தைகள் உட்பட 12 பேர் உயிரிழப்பு... கேரளாவில் நிகழ்ந்த சோகம்!!
இந்நிலையில், இதற்கு திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் சிங் தாகூருக்கும், திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, கடிதம் அனுப்பியுள்ளார். அதில், ஆல் இந்தியா ரேடியோ (All India Radio) என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு, அதற்குப் பதிலாக ஆகாஷ்வானி என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது நியாயமற்றது.
இதையும் படிங்க: கர்நாடகா தேர்தல் 2023: காங்கிரஸ் வளர்ச்சி பேனாவிலும், பேப்பரிலும் மட்டுமே இருக்கு - பிரதமர் மோடி தாக்கு
இது சரியானது அல்ல, ஏற்றுக்கொள்ள முடியாதது. அகில இந்திய வானொலியில் தமிழுக்கு உரிய இடத்தை மறுத்து, அதற்குப் பதிலாக இந்தியைத் திணிக்கும் பிரசார் பாரதியின் நடவடிக்கைக்கு திமுக சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.
