உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் டி.ஆர்.அந்தி அர்ஜுனா மரணம் அடைந்தார். ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு வழக்கில், திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் அந்தி அர்ஜுனா வாதாடினார்.

மேலும், சமர்ச்சீர் கல்வி கடந்த திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. பின்னர், ஆட்சி மாற்றத்தால், முடக்க முயன்றனர். இதனை எதிர்த்து வழக்கு தொடர்ந்தபோது, அதில் வழக்கறிஞர் அந்தி அர்ஜுனா வாதாடி வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

டி.ஆ.அந்தி அர்ஜுனா, மகராஷ்டிரா மாநில உயர்நீதிமன்றத்தில், அரசு வழக்கறிஞராக பல ஆண்டுகள் இருந்துள்ளார். அரசியல் சாசனம், மனித உரிமை, பொதுச்சட்டம் உள்பட பல்வேறு வழக்குகளில் வாதாடியவர். அதிக ஆளுமை பெற்றவர்.

இந்நிலையில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் மும்பையில் அவர் காலமானார். அவருக்கு வயது (83)