குழந்தைகளை தாக்கும் “தக்காளி காய்ச்சல்” 85 குழந்தைகள் பாதிப்பு.. கேரளாவில் பீதியை கிளப்பும் வைரஸ்!

கேரள மாநிலம் கொல்லத்தில் புதுவகை வைரஸ் காய்ச்சலால் 5 வயதுக்கு உட்பட்ட ஏராளமான குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Tomato fever spreads among children raised cases in the kerala warning to stay vigilant these are the main symptoms

உலகம் மக்களை கடந்த 2 ஆண்டு காலமாக தனது கைப்பிடிக்குள் வைத்துள்ளது கொரோனா வைரஸ். உருமாறிய டெல்டா வகை கொரோனா தொற்று விஸ்வரூபம் எடுத்துள்ளது. உலக நாடுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகள் டெல்டா கொரோனா பாதிப்பினால் தடுமாறி வருகின்றன. தற்போது இந்தியாவில் கொரோனா சராசரி பாதிப்புக்கு கீழ் உள்ளது. மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. 

இந்நிலையில் கேரளாவில் புது வகையான வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. இது பொதுமக்களிடையே மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலம் கொல்லத்தில் புதுவகை வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. குறிப்பாக காய்ச்சல், உடல் வலி, கை, கால்கள் வெள்ளை நிறமாக மாறுதல் உள்பட பல அறிகுறிகளுடன் 5 வயதுக்கு உட்பட்ட ஏராளமான குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். 

Tomato fever spreads among children raised cases in the kerala warning to stay vigilant these are the main symptoms

இதை தொடர்ந்து நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் 'தக்காளி காய்ச்சல்' எனப்படும் புதிய வகை வைரஸ் பரவி வருவது தெரியவந்தது. கொல்லம் மாவட்டத்தில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் இதுவரை 85 குழந்தைகள் தக்காளி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள குழந்தைகளையும் சேர்த்தால் இந்த எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் பொதுமக்களிடம் புதிய வைரஸ் காய்ச்சல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இதன் பாதிப்பு அதிகமாக இருப்பதால் பெற்றோர்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி சுகாதாரத்துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டு உள்ளனர். பொதுமக்களிடையே இந்த தக்காளி காய்ச்சல் பீதியை ஏற்படுத்தி இருக்கிறது.

இதையும் படிங்க : Asani: இன்று உருவாகிறது அசானி புயல்.. தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு - எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா ?

இதையும் படிங்க : திமுகவின் முக்கிய விக்கெட்..தட்டி தூக்கிய அண்ணாமலை.! பாஜகவுக்கு தாவும் எம்.பி திருச்சி சிவா மகன்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios