நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் வாகனங்களுக்கான கட்டண வசூல் நேற்று நள்ளிரவு முதல் மீண்டும் துவங்கியுள்ளது.
பிரதமர் மோடி, 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என கடந்த மாதம் 8ம் தேதி இரவு அறிவித்தார். இதனால் ஏற்பட்ட பிரச்சனையால் சுங்கச்சாவடிகளில் டிசம்பர் 2ம் தேதி வரை கட்டண,ம் ரத்து என மத்திய அரசு அறிவித்தது. இதை தொடர்ந்து, நேற்று நள்ளிரவு முதல் அனைத்து சுங்கச்சாவடிகளிலும் கட்டணம் வசூலிக்க தொடங்கியது.
இதற்கிடையில், பொதுமக்கள் தங்களிடம் உள்ள பணத்தை மாற்றுவற்கோ, தங்கள் கணக்கில் இருந்து பணத்தை எடுத்தாலோ 2000 ரூபாய் நோட்டுகளாகவே கிடைக்கிறது. இதனால், சில்லறை கிடைக்காமல், அலைந்து திரியும் அவல நிலை நீடித்து வருகிறது.

இதையொட்டி சுங்க கட்டணம் செலுத்துவதற்காக வாகன ஓட்டிகள் அனைவரும் 2000 ரூபாய் நோட்டுகளையே, சுங்கச்சாவடிகளில் கொடுப்பதால், போதிய சில்லறை தர முடியாமல் சுங்கச்சாவடி ஊழியர்கள் திணறுகின்றனர். இதனால் பல இடங்களில் வாக்குவாதமும் தகராறு நடந்த வண்ணம் உள்ளது.
கட்டணம் செலுத்தும் முறைக்கு இன்று முதல் மின்னணு பண பரிவர்த்தனை தொடங்கப்படும். இதற்காக ஸ்வைப் செய்யும் வசதி ஏற்படுத்தப்படும் என கூறப்படுகிறது.
சுங்கச்சாவடிகளில் கட்டண வசூலிப்பு மீண்டும் துவங்கியுள்ளதால் லாரிகளை இயக்க முடியாத நிலை ஏற்பட்டும் என லாரி உரிமையாளர்கள் கூறியுள்ளனர். எனவே சுங்கக் கட்டணம் வசூலிக்கும் முறையை நீடித்து, இம்மாத இறுதி வரை அவகாசம் கொடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
