today rest for rahul says smrithi

காங்கிரஸ் துணை தலைவர் ராகுலை தொடர்ந்து விமர்சித்து வரும் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, ‘‘இன்று (மே 21) முன்னாள் பிரதமர் ராஜீவ் நினைவு நாள். எனவே, இன்று ஒரு நாள் மட்டும் ராகுலை விமர்சனம் செய்வதை விட்டுவிடுகிறேன்,'' என்று கூறியுள்ளார்.

தனியார் 'டிவி' சேனல் நிகழ்ச்சியில் ஸ்மிருதி இரானி இது குறித்து கூறியதாவது:-

மத்தியில் உள்ள பா.ஜனதா அரசு ஒவ்வொரு வாக்குறுதிகளையும் நிறைவேற்றி வருகிறது. முன்பு, 2 கோடி பெண்கள் புகை சூழ்ந்த சமையலறையில் பணியாற்றி வந்தனர். இப்போது அவர்களுக்கு சமையல் கியாஸ் சிலிண்டர் வழங்கப்பட்டுள்ளது.

முத்ரா வங்கி மூலம், ஏழு கோடி பேருக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது. அரசின் கொள்கை முடிவுகள் குறித்து முடிவு எடுக்க மக்கள், பிரதமருக்கு நேரடியாக கருத்துக்களை தெரிவிக்க வசதி செய்து தரப்பட்டுள்ளது.

இன்று, முன்னாள் பிரதமர் ராஜீவ் நினைவு நாள். எனவே, இன்று ஒரு நாள் மட்டும் ராகுலை விமர்சனம் செய்வதை விட்டுவிடுவோம். எனினும், ராகுலின் அமேதி தொகுதி 60 ஆண்டுகளாக எந்த வளர்ச்சியும் அடையவில்லை.

மூன்று ஆண்டுகளுக்கு முன் நான் அந்த தொகுதிக்கு சென்ற போது, ஒரு மனுஷியாக, ஒரு குடிமகளாக மிகவும் வேதனை அடைந்தேன்.

இவ்வாறு அவர் கூறினார்