துபாயில் உயிரிழந்த நடிகை ஸ்ரீதேவியின் உடல் இன்று  நள்ளிரவு மும்பைக்கு கொண்டு வரப்படுகிறது. நாளை காலை 11 மணிக்கு ஸ்ரீதேவியின் உடல் ஜூஹீ கடற்கடையில் பவன்ஹன்ஸ் பகுதியில் தகனம் செய்யப்படுகிறது. 

தன் உறவினர் மோஹித் மார்வாவின் திருமணத்துக்காக மகள் குஷி மற்றும் கணவர் போனி கபூருடன் நடிகை ஸ்ரீதேவி கடந்த 20 ஆம் தேதி துபாய் சென்றிருந்தார். 

அப்போது மாரடைப்பின் காரணமாக திடீரென ஸ்ரீதேவி உயிரிழந்தாக கூறப்பட்டது. இதையடுத்து ஸ்ரீதேவியின் உடல் துபாயில் இருந்து மும்பைக்கு இன்று கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

ஸ்ரீ தேவியின் நெருங்கிய திரைத்துறை நண்பர்களான ரஜினி கமல் மற்றும் மேலும் பல நட்சத்திரங்கள் இறுதி சடங்கில் பங்கேற்பதற்காக மும்பை விரைந்துள்ளனர். 

இதையடுத்து ஸ்ரீதேவியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதில், வெளியான ரிப்போர்ட்டில் துபாயில் ஹோட்டல் அறையின் குளியல் தொட்டியில் மூழ்கி நடிகை ஸ்ரீதேவி உயிரிழந்ததாகவும் ஸ்ரீதேவியின் மரணத்தில் குற்றவியல் நோக்கம் இல்லை எனவும்  தடவியல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

மேலும் ஸ்ரீதேவியின் ரத்தத்தில் மதுபானம் இருந்ததாகவும் பிரேத பரிசோதனை அறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது. 

இதையடுத்து ஸ்ரீதேவியின் உடல் எம்பார்மிங் செய்யப்பட்டு வருகிறது.  ஸ்ரீதேவியின் உடல் இன்று  நள்ளிரவு மும்பைக்கு கொண்டு வரப்படுகிறது. நாளை காலை 11 மணிக்கு ஸ்ரீதேவியின் உடல் ஜூஹீ கடற்கடையில் பவன்ஹன்ஸ் பகுதியில் தகனம் செய்யப்படுகிறது.