Asianet News TamilAsianet News Tamil

புதிய கல்வி கொள்கையை உருவாக்க கஸ்தூரி ரங்கன் தலைமையில் குழு...

To createa new education policymeeting over the head of Kasturi Rangan
To createa new education policymeeting over the head of Kasturi Rangan
Author
First Published Jun 26, 2017, 3:39 PM IST


நாட்டில் புதிய தேசிய கல்விக் கொள்கையை உருவாக்க, விண்வௌித்துறை விஞ்ஞானி கிருஷ்ணசாமி கஸ்தூரி ரங்கன் தலைமையில் 9 பேர் கொண்ட குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.

கல்விக்கொள்கை
நாட்டின் கல்விக் கொள்கையை மாற்றி அமைக்க கடந்த இரு ஆண்டுகளுக்கு முன், அமைச்சரவைச் செயலாளர் டி.எஸ்.ஆர். சுப்பிரமணியன் தலைமையில் மத்தியஅரசு குழு அமைத்தது. அந்த குழு சில பரிந்துரைகளை அளித்தது. அதன்பின் அந்த குழு கிடப்பில் போடப்பட்டது.

9 பேர் கொண்ட குழு

இந்நிலையில், மத்திய மனித வளத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் புதிய தேசியக் கல்வி கொள்கையை உருவாக்க பல்வேறு துறைகளில் வல்லுநர்களைக் கொண்ட 9 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இஸ்ரோ விஞ்ஞானி

இந்த குழுவுக்கு முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி கிருஷ்ணசாமி கஸ்தூரி ரங்கன் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐ.ஏ.எஸ். அதிகாரி

மேலும், முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி கே.எல். அல்போன்ஸ் கனம்தனம் நியமிக்கப்பட்டுள்ளார். கேரள மாநிலத்தில் கோட்டயம், எர்ணாகுளம் மாவட்டத்தில் மக்கள் 100 சதவீதம் கல்வியறிவு பெற முக்கியக் காரணமாக அல்போன்ஸ் இருந்தார்.

வேளாண் அறிவியல்
மத்தியப் பிரதேசம், மஹோ நகரில் உள்ள பாபா சாஹேப் அம்பேத்கர் பல்கலையின் துணைவேந்தர் ராம் சங்கர் குரீல் சேர்க்கப்பட்டுள்ளார். இவருக்கு வேளாண் அறிவியல் மற்றும் மேலாண்மை குறித்து மிகச்சிறந்த ஆழ்ந்த அனுவம் இருக்கிறது. 

கர்நாடக மாநில புத்தாக்க கவுன்சிலின் முன்னாள் செயலாளர் டாக்டர் எம்.கே. தர், மொழியியலில் வல்லுநரான டாக்டர் டி.வி. கிட்டாமணி, கவுகாத்தி பல்கலையில், பெர்சியன் மொழி பேராசிரியர் டாக்டர் மஜர் ஆசிப், உ.பி.யின் முன்னாள் கல்வி இயக்குநர் கிருஷ்ணன் மோகன் திரிபாதி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். 

மேலும், இந்த குழுவில் பிரின்ஸ்டன் பல்கலையைச் சேரந்த கணிதவியல் நிபுனர் மஞ்சுள் பார்கவா, மும்பை எஸ்.என்.டி.டி. பல்கலையின் முன்னாள் துணை வேந்தர் வசுதா காமத் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வேற்றுமையில் ஒற்றுமை
இது குறித்து மத்திய மனித வள அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “ கல்வித்துறையின் பல்வேறு பிரிவுகளில் மிகச்சிறந்த வல்லுனத்தவம் பெற்றவர்களை தேசியக் கல்விக் கொள்கை உருவாக்க வேண்டும் என்பதை மனதில் வைத்து உருவாக்கப்பட்டுள்ளது.மேலும், இந்த கல்விக்கொள்கை உறுப்பினர்கள் பல்வேறு மதம், இனத்தை சேர்ந்தவர்களாக இருந்து வேற்றுமையில் ஒற்றுமை என்பதை நிரூபிக்கிறார்கள்.

சர்வதேச தரம்

கல்விக்கொள்கை உருவாக்கத்தில் ஏற்படும் சிக்கல்களை களைய வேண்டும் என்பதை மனதில் வைத்தே பல்வேறு தரப்பினரை இதில் சேர்துள்ளோம். இந்த குழுவின் உறுப்பினர்கள் வெவ்வேறு வயதைச் சேர்ந்தவர்கள். இதனால், அனுபவம், புத்தாகம், சர்வதேச தரம் ஆகியவற்றை தேசியக் கல்விக் கொள்கையில் புகுத்த முடியும்’’ எனத் தெரிவித்தார்.

 

Follow Us:
Download App:
  • android
  • ios