அதிபயங்கர புயலாக மாறியது டிட்லி….. நாளை கரையை கடக்கிறது… முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்…

https://static.asianetnews.com/images/authors/7c75b3b3-3057-52ee-ad74-0f9554f16f46.jpg
First Published 10, Oct 2018, 11:24 PM IST
titly strom  affect odissa and andra
Highlights

வங்கக் கடலில் உருவாகியுள்ள டிட்லி புயல் அதிதீவிர புயலாக மாறி நாளை காலை ஆந்திர மாநிலம் கலிங்கப்பட்டனத்துக்கும் ஒடிசா மாநிலம் கோபால்பூருக்கும் இடையே கரையை கடக்கிறது.  இதையடுத்து ஒடிசா மாநிலத்தில் உள்ள 5 மாவட்ட மக்கள் கூண்டோடு வேறு இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

வங்கக்கடலில் உருவான டிட்லி  புயல் வலுப்பெற்று தீவிர புயலாக மாறி ஆந்திர மாநிலம் கலிங்கப்பட்டினத்தில் இருந்து தென் கிழக்கில் 270 கிலோ மீட்டர் தூரத்திலும், ஒடிசா மாநிலம் கோபால்பூருக்கு தென் கிழக்கில் 320 கிலோ மீட்டர் தூரத்திலும் நிலை கொண்டுள்ளது.

அந்த புயல் கலிங்கப்பட்டினத்திற்கும், கோபால்பூருக்கும் இடையே நாளை  காலை கரையை கடக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

  ஒடிசாவின் கடற்கரைப் பகுதிகள், ஆந்திரா கலிங்கப்பட்டிணம் பகுதியில் கடல் கொந்தளிப்பு இருக்கும் என்றும் பெரிய அலைகள் எழும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. புயல் கரையை கடக்கும் போது காற்று 145 கிமீ வேகத்தில் அடிக்கும். பின்னர் புயல் வடகிழக்கு திசை நோக்கி திரும்பி மேற்குவங்கம் நோக்கி நகர்ந்து பிறகு படிப்படியாக பலம் இழக்கும் என்று விசாகப்பட்டிணம் வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புயல் கரையை கடக்கும் நிலையில் தற்போது ஒடிசா கடற்கரைப் பகுதிகளில் கனமழை பெய்துவருகிறது. மேற்கு வங்காளம், வடக்கு ஆந்திரா மற்றும் ஒடிசா மாநிலங்களில் மீன்வர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 மேற்கு வங்காளம் மாநிலத்திலும் 6 மாவட்டங்களுக்கு இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது,

இந்நிலையில் 5 மாவட்டங்களில் மக்களை பாதுகாப்பாக வெளியேற்றும் பணி தொடங்கியுள்ளது. புயல் கரையை கடக்கும் நிலையில் காற்றுடன் கனமழை பெய்யும் என்பதால் அங்கு அம்மாநில அரசு தீவிரமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

மாநில முதலமைச்சர்  நவீன் பாட்நாயக் அம்மாநில அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனையை மேற்கொண்டார். தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுக்கும்படி மாவட்ட நிர்வாகங்களுக்கு உத்தரவிடப்பட்டது.

ஒடிசாவின் 4 மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே மக்கள் புயல் அச்சம் காரணமாக அத்தியாவசியப் பொருட்களை வாங்கி குவித்து வருகிறார்கள். இப்படி பதற்றமாக வாங்கி குவிக்க வேண்டிய அவசியமில்லை என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

இதுவரையில் 14 தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் நிலை நிறுத்தப்பட்டுள்ளனர். சிறப்பு படை போலீசாரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

loader