Asianet News TamilAsianet News Tamil

திருமலை திருப்பதி டீக்கடை பேப்பர் கப்பில் சிலுவை சின்னம்.. அதிரடி நடவடிக்கை எடுத்த வேதஸ்தானம்..!

திருமலை திருப்பதியில் இந்து மதம் தவிர பிற மத அடையாளங்களை கொண்டு வரவும் பயன்படுத்தவும் தடை அமலில் உள்ளது. அப்படி இருந்த போதிலும்  மறைமுகமாக மற்ற மத அடையாளங்களை  புகுத்து விட முயற்சிகள் அவ்வப்போது நடைபெற்று வருகிறது. 

Tirupati Tirumala Devasthanam tea shop seal
Author
First Published Jun 27, 2023, 10:47 AM IST

திருப்பதி ஏழுமலையான் கோயில் அமைந்துள்ள திருமலையில் உள்ள  டீக்கடையில் விநியோகித்த பேப்பர் கப்பில் சிலுவை சின்னம் இருந்ததை அடுத்து கடைக்கு வேதஸ்தான அதிகாரிகள் சீல் வைத்தனர். 

திருமலை திருப்பதியில் இந்து மதம் தவிர பிற மத அடையாளங்களை கொண்டு வரவும் பயன்படுத்தவும் தடை அமலில் உள்ளது. அப்படி இருந்த போதிலும்  மறைமுகமாக மற்ற மத அடையாளங்களை  புகுத்து விட முயற்சிகள் அவ்வப்போது நடைபெற்று வருகிறது. 

Tirupati Tirumala Devasthanam tea shop seal

இந்நிலையில் திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயில் அமைந்துள்ள டீக்கடை ஒன்றில் பக்தர்களுக்கு விநியோகிக்கப்பட்ட பேப்பர் கப்பில் சிலுவை குறியுடன் சின்னம்  இருந்துள்ளது. இது தொடர்பாக பக்தர்கள் புகார் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் தேவஸ்தான விஜிலன்ஸ் துறையினர் அந்த டீக்கடைக்கு  அதிரடியாக சீல் வைத்தனர். மேலும்,  இந்த டீ கப்புகள் உங்களுக்கு எப்படி கிடைத்தது என்று விசாரணை மேற்கண்டனர். 

Tirupati Tirumala Devasthanam tea shop seal

அப்போது திருப்பதி மலையில் உள்ள மொத்த விற்பனை கடை ஒன்றில் வாங்கியதாக டீ கடை உரிமையாளர் தெரிவித்ததை அடுத்து அங்கு சோதனை நடைபெற்று அந்த கடைக்கும் சீல் வைக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக நேரில் விளக்கம் அளிக்குமாறு கடை உரிமையாளருக்கு தேவஸ்தான விஜிலன்ஸ் துறையினர் உத்தரவிட்டுள்ளனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios