திருப்பதி வேடுபறி உற்சவம்: மான் வேட்டையாடினார் மலையப்பசாமி!

திருப்பதி மலையில் வேடுபறி உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது

Tirumala Tirupati temple vedupari utsavam held today smp

விஜயதசமி தினமான இன்று திருப்பதி மலையில் உள்ள வனப்பகுதியில் வேடுபறி உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது. அப்போது உற்சவர் மலையப்ப சுவாமி, சம்பிரதாய முறையில் மான் வேட்டையாடினார். 

ஒவ்வொரு ஆண்டும் விஜயதசமி தினம் அன்று திருப்பதி மலையில் வேடுபறி உற்சவம் நடைபெறும். அந்த வகையில் இன்று நடைபெற்ற வேடுபறி உற்சவத்தில் எழுந்தருள்வதற்காக மலையப்ப சுவாமி, கிருஷ்ணர் ஆகிய  உற்சவர்கள் கோவிலில் இருந்து தனித்தனி பல்லக்குகளில் புறப்பட்டு, திருப்பதி மலையில் இருந்து சுமார் ஏழு கிலோ மீட்டர் தொலைவில் பாபநாசம் செல்லும் வழியில் இருக்கும் வேடுப்பறி உற்சவ மண்டபத்தை அடைந்தனர்.

இந்தியாவில் அதிகம் திருடு போகும் 5 கார்கள்: என்ன காரணம்?

அங்கு மலையப்ப சுவாமி, கிருஷ்ணர் ஆகிய உற்சவர்களுக்கு சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டன.  அதனை தொடர்ந்து வேடுபறி உற்சவம் நடைபெற்றது. அப்போது உற்சவர் மலையப்ப சுவாமியை தேவஸ்தான ஊழியர்கள் மூன்று முறை முன்னும் பின்னும் தூக்கி சென்ற போது, ஏழுமலையான் கோவில்  தலைமை அர்ச்சகர் கையில் வைத்திருந்த வெள்ளி ஈட்டி ஒன்றை பொய்மான்கள் கட்டி வைக்கப்பட்டிருந்த பகுதியை நோக்கி வீசி எறிந்தார்.

மூன்று முறை ஈட்டி வீசி எறியப்பட்ட பின் மலையப்ப சுவாமி,  கிருஷ்ணர் ஆகிய உற்சவர்கள் மீண்டும் கோவிலை அடைந்தனர். நிக்ழ்ச்சியில் தேவஸ்தான  அதிகாரிகள், ஏராளமான பக்தர்கள் ஊழியர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios