times now research result is bjp victory of the sixth time
விரைவில் நடைபெற உள்ள குஜராத் சட்டசபை தேர்தலில், பாரதிய ஜனதா கட்சி 6-வது முறையாக வென்று சாதனை படைக்கும் என்று ‘டைம்ஸ் நவ் - வி.எம்.ஆர்.’ நடத்திய ஆய்வில் (சர்வே) தெரியவந்துள்ளது.
டிசம்பரில் தேர்தல்
குஜராத் சட்டசபைக்கு டிசம்பர் 9 மற்றும் 14 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.
இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு, தலைமை தேர்தல் ஆணையத்தால் நேற்று வெளியிடப்பட்டது.
எளிதில் வெற்றி
குஜராத் தேரதல் நிலவரம் குறித்து ‘இந்தியா டுடே’ மேற்கொண்ட கருத்து கணிப்பு முடிவுகளும் அன்றே வெளியிடப்பட்டது.
அதில், குஜராத் மட்டுமின்றி, இமாசல பிரதேச தேர்தலிலும் பா.ஜனதா எளிதில் வெற்றி பெறும் என கணிக்கப்பட்டு இருந்தது.
6-வது முறையாக..
குஜராத் மாநிலத்தில், தொடர்ந்து கடந்த 5 தேர்தல்களில் பா.ஜனதா வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. இந்த நிலையில், தற்போது நடைபெற இருக்கும் தேர்தல் குறித்து, ‘டைம்ஸ் நவ்- வி.எம்.ஆர்.’ நடத்திய ஆய்வில், இந்த தேர்தலிலும் பா.ஜனதா வெற்றி பெற்று 6-வது முறையாக (டபுள் ஹாட் டிரிக்) ஆட்சியைப் பிடிக்கும் என தெரிய வந்துள்ளது. ஆய்வு முடிவில் மேலும் வெளியான தகவல் வருமாறு-
118 முதல் 134 வரை
182 இடங்கள் கொண்ட குஜராத் சட்டசபையில், பாரதிய ஜனதா கட்சி 118 முதல் 134 இடங்கள் வரை கைப்பற்றும். (கடந்த 2012-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பா.ஜ., 115 இடங்களை கைப்பற்றியிருந்தது.)
கடந்த தேர்தலில் 61 இடங்களை பெற்றிருந்த காங்கிரஸ் கட்சிக்கு இம்முறையும் 49 முதல் 61 இடங்கள் வரை கிடைக்கும்.
ஓட்டுகள் சதவீதம்
ஓட்டுக்கள் அடிப்படையில், பா.ஜ.விற்கு ஓட்டு சதவீதம் 4 சதவீதம் அதிகரிக்கும் ( 48-ல் இருந்து 52%), காங்கிரஸ் கட்சிக்கு 39 சதவீதத்திலிருந்து 37 சதவீதம் என்ற அளவிற்கு (2 சதவீதம்) குறையும்.
500, 1000 ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பு மற்றும் ஜி.எஸ்.டி. திட்டங்களின் மூலம் மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்துள்ளதாக 28 சதவீதம் பேரும், மக்களின் வாழ்க்கைத்தரம் மோசமாக நலிவடைந்துள்ளதாக 40 சதவீதம் பேரும், இவ்விரு திட்டங்களால் எவ்வித மாற்றமுமில்லை என்று 18 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர்.
சிறந்த முதல்வர் மோடி
குஜராத்தில் முதல்- அமைச்சர் பதவி வகித்த பா.ஜனதா தலைவர்களில் மோடியே சிறந்த முதல்வர் என 67 சதவீதம் பேர் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள்.
மற்ற இரு முதல்வர்களான ஆனந்தி பென்படேலுக்கு 20 சதவீத ஆதரவும், விஜய் ரூபானிக்கு 13 சதவீத ஆதரவும் உள்ளது.
