திருப்பதி தேவஸ்தான "தரிசன முறையில்" மாற்றம்...! நேரம் தெரியாமல் சென்று திரும்பி வர வேண்டாமே ..!

First Published 10, Aug 2018, 5:06 PM IST
time changes schedule statement came from ttd
Highlights

திருப்பதி கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற இருப்பதால் பக்தர்களின் தரிசன முறையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. 

திருப்பதி தேவஸ்தான தரிசன முறையில் மாற்றம்...! 

திருப்பதி கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற இருப்பதால் பக்தர்களின் தரிசன முறையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. 
இதன் காரணமாக நாளை முதல் ஒரு வார காலத்திற்கு, ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும் பக்தர்களை அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நாளை 11 ஆம் தேதி முதல் 16-ம் தேதி, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. இந்த கும்பாபிஷேகம் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் மிக சிறந்த கும்பாபிஷேகம் ஆகும். ஆகம விதிகளின்படி இந்த கும்பாபிஷேகம் நடத்தப்படுவதால், முதல் தினமான நாளை அங்குரார்ப்பண நிகழ்வு நடத்த உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே நாளை முதல் வரும் 16-ஆம் தேதி  வரையிலான, ஒரு வார காலத்தில் ரூ.300 கான சிறப்பு தரிசனம், இலவச தரிசனம், நடைப்பாதை தரிசனம், வி.ஐ.பி. தரிசனம் உள்ளிட்ட அனைத்து தரிசனமும் ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தான நிர்வாகம் அறிவித்து உள்ளது. மேலும், 16 - ஆம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் எப்போதும உள்ளவாறே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என கோவில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது. 

loader