களைகட்டிய திருச்சூர் பூரம் கொண்டாட்டம்! அதிகாலை வானவேடிக்கையுடன் முடிகிறது!
திருச்சூர் மற்றும் அண்டை மாவட்டங்களில் திருச்சூர் பூரம் முக்கிய கொண்டாட்டம் ஆகும். இந்த விழாவை முன்னிட்டு சிவபெருமானை வழிபட கேரளா முழுவதிலும் இருந்து மக்கள் கூடுவார்கள்.
கேரளாவில் மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படுவது திருச்சூர் பூரம் குடமட்டம் திருவிழா. வடக்குநாதன் கோயில் தேக்கிங்காடு மைதானத்தில் இந்தத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திருவம்பாடி மற்றும் பரமேக்காவு அணிகளின் குடமட்டம் என்ற பிரம்மாண்டமான அணிவகுப்பு காட்சியைக் காண ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்தனர்.
பிரமாண்டமான 'குடமட்டம்' நிகழ்வில் அலங்கரிக்கப்பட்ட 30 யானைகள் ஒன்றுக்கொன்று எதிரே அணிவகுத்து நின்றன. கனிமங்கலம் சாஸ்தா தெற்கு வாசல் வழியாக யானைச் சிறக்கால் காளிதாசன் முதலில் பிரவேசித்து. அதைத் தொடர்ந்து மற்ற யானைகளும் வந்தன. கேரளாவில் அதிக ரசிகர்களை கொண்ட யானையான தெச்சிகோட்டுகாவு ராமச்சந்திரன், நைத்தலக்காவு பகவதியின் திடம்பு ஏந்தி வந்தது.
பிரதமர் மோடியின் வாகனம் மீது செல்போன் வீசிய பெண் பாஜக தொண்டர்!
திருச்சூர் பூரத்தின் இரண்டு முக்கிய நிகழ்வுகளான கூட்டி எழுநல்லிப்பு மற்றும் குடமாட்டம் ஆகியவற்றில் இரு கோவில்களில் உள்ள பலவிதமான குடைகள் காட்சிபடுத்தப்பட்டன. அதில், 'கும்மாட்டி', 'முருகன்', 'புலி', 'தெய்யம்' மற்றும் 'சிவன்' வடிவங்கள் கொண்ட குடைகளும், இரட்டை மற்றும் மூன்று அடுக்கு குடைகளும் இடம்பெற்றன. எல்இடி விளக்குகளுடன் நவீன குடைகளும் கண்கவர் நிகழச்சியில் காணப்பட்டன. பூரம் கொண்டாட்டத்தின் நிறைவாக, திங்கள்கிழமை அதிகாலை 3 மணிக்கு மெகா வானவேடிக்கை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
திருச்சூர் பூரம் என்பது கேரள மாநிலம் திருச்சூர் நகரில் உள்ள பெரிய தேக்கிங்காடு மைதானத்தில் மலையாள மாதமான மேடம் மாதத்தில் பூரம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படும் திருவிழாவாகும். இந்த நிகழ்வு உலகம் முழுவதிலும் இருந்துவரும் ரசிகர்களை ஈர்க்கும் திருவிழாவாக உள்ளது. விழாவில் கேரள தாள வாத்தியங்களின் ஏற்ப நடனமாடுவதைக் காணலாம். இந்தத் திருவிழா 200 ஆண்டுகளுக்கும் மேலாக ஆண்டுதோறும் பூரம் நாளில் நடைபெற்று வருகிறது.
யானைகளுக்கு வழி விட்டு விலகும் புலி! வனத்துறை அதிகாரி வெளியிட்ட வைரல் வீடியோ!
இரண்டு நூற்றாண்டு பழமையான திருச்சூர் பூரம் அந்த கால கொச்சி சமஸ்தானத்தின் முக்கிய மன்னரான ஷக்தன் தம்புரான் என்று பரவலாக அறியப்பட்ட ராஜா ராம வர்மா காலத்தில் 1798 இல் ஆரம்பிக்கப்பட்டது. முதலில் பரமேக்காவு மற்றும் திருவம்பாடி கோயில் அணிவகுப்புகள் பங்கேற்றன. பின், பக்கத்து கோவில்களில் இருந்து சிறிய அணிவகுப்புகள் இணைந்தன. இறுதியாக வானவேடிக்கை நிகழ்ச்சியுடன் பூரம் திருவிழா முடிந்தது.
அன்றிலிருந்து ஒவ்வொரு ஆண்டும், இந்த நிகழ்வில், அலங்கரிக்கப்பட்ட யானைகள், பிரகாசமான வண்ணங்களில் அணிவகுக்கின்றன. வழக்கமாக காலை 6:30 மணிக்கு பூரம் நிகழ்வு தொடங்கும். பூரம் அணிவகுப்பு நடக்கும் மைதானத்தில் திருவம்பாடி மற்றும் பாறமேக்காவு அம்மன்கள் இருப்பதாக நம்பப்படுகிறது. தாள வாத்தியமும் மற்றும் கண்கவர் வானவேடிக்கைகளும் விழாவின் மு்க்கியப் பகுதிகளாகும்.