யானைகளுக்கு வழி விட்டு விலகும் புலி! வனத்துறை அதிகாரி வெளியிட்ட வைரல் வீடியோ!
புலி யானைக் கூட்டத்துக்கு வழி விட்டு விலகும் வீடியோ சமூக வலைத்தளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
புலிகள் வேட்டையாடுவதில் திறமை வாய்ந்தவை என்பது உண்மைதான். ஆனால் அந்தப் புலிகள்கூட சமயத்தில் யானைகளுக்குப் பணிந்து போகும் ஆச்சரியமான காட்சியை இந்திய வனத்துறை அதிகாரி ஒருவர் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்திய வனத்துறை அதிகாரி சுசந்தா நந்தா ட்விட்டரில் வீடியோ ஒன்றைப் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் காட்டில் யானைக் கூட்டத்திற்குப் புலி வழி விட்டு ஒதுங்கும் காட்சி இடம் பெற்றுள்ளது. யானைகள் குழு ஒன்று காட்டுப் பாதையில் நடந்து செல்வதையும், ஒரு புலி யானைகளைக் கண்டவுடன், ஒரு ஓரமாக அமர்ந்து யானைக்கூட்டம் கடந்து செல்வதற்காகக் காத்திருப்பதையும் வீடியோ காட்டுகிறது.
யானைக் கூட்டம் மெதுவாக முன்னேறுகிறது. புலி பொறுமையாக அமர்ந்து யானைகள் செல்வதைப் பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருக்கிறது. ஆனால் யானைகள் எதுவும் புலியைப் பற்றிக் கவலைப்படவில்லை. அவை ஒன்றன் பின் ஒன்றாக தனது பாதையில் செல்கின்றன.
காங்கிரஸ் முகமே இல்லாத கட்சி... வாக்குறுதிகளுக்கு உத்தரவாதம் கிடையாது! அமித் ஷா விமர்சனம்
இந்த வீடியோவை வெளியிட்ட சுசந்தா நந்தா, "விலங்குகள் இப்படித்தான் தொடர்பு கொள்கின்றன. தமக்குள் நல்லிணக்கத்தைப் பேணுகின்றன... புலி இருப்பதை அறிந்ததும் யானை பிளிறி எச்சரிக்கிறது. உடனே புலி யானைக் கூட்டத்திற்கு வழிவிடுகிறது" என தனது ட்வீட்டில் எழுதியுள்ளார்.
இந்த வீடியோவை முதலில் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டவர் காட்டுயிர் புகைப்படக் கலைஞரான விஜேதா சிம்ஹா. அவருக்கும் சுசந்தா நந்தா தன் ட்வீட்டில் நன்றி தெரிவித்துள்ளார். ஆனால், இந்த வீடியோ எங்கு, எப்போது எடுக்கப்பட்டது என்ற விவரங்கள் தெரியவில்லை.
ஆனால், இந்த வீடியோ ட்விட்டரில் வெளியான வேகத்தில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. நெட்டிசன்களிடமிருந்து பல விதமான எதிர்வினைகளும் வந்த வண்ணம் உள்ளன. "என்ன ஒரு சந்திப்பு. புலி வலிமைமிக்க யானைக்கு உரிய மரியாதை அளிக்கிறது" என்று ஒரு பயனர் கமெண்ட் செய்துள்ளார். மற்றொருவர், "என்ன ஒரு அழகான காட்சி. புலி எப்படி யானைகளுக்கு வழிவிடும் காட்சி மிகவும் பிடித்திருக்கிறது" என்கிறார். "ஆஹா! அது ஒரு நம்பமுடியாத காட்சி" என இன்னொருவர் கருத்து தெரிவித்துள்ளார்.
புலிகள் பொதுவாக காடுகளில் காணப்படும் மான், குரங்குகள், பன்றிகள் போன்ற நடுத்தர அளவிலான பாலூட்டிகளை தனது இரையாக வேட்டையாடுகின்றன. முழு வளர்ச்சியடைந்த யானைகளைக்கூட புலிகள் வேட்டையாடுவது அரிது.
Watch: பற்றி எரிந்த ஸ்டேட் வங்கி ஏடிஎம்! தீயில் கருகி நாசமான ரூபாய் நோட்டுகள்!