Asianet News TamilAsianet News Tamil

காணாமல் போன மூன்று சகோதரிகள்.. ஒரே பெட்டிக்குள் சடலமாக மீட்பு.. அரங்கேறிய கொடூரம் - என்ன நடந்தது?

சண்டிகரில், ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று சிறுமிகளும், நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் காணவில்லை என்று, வேலை முடிந்து வீடு திரும்பிய அந்த சிறுமிகளின் பெற்றோர் மக்சூடன் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசாரும் உடனடியாக அந்த சிறுமிகளை தேடும் பணியில் உடனே ஈடுபட்டனர். 

Three Sisters went missing in Chandigarh found dead inside a iron box ans
Author
First Published Oct 2, 2023, 5:16 PM IST

சண்டிகர், ஜலந்தர் மாவட்டத்தின் கான்பூர் கிராமத்தில் தான் அந்த மூன்று சகோதிரிகள், தங்களது தாய் மற்றும் தந்தையுடன் வசித்து வந்துள்ளனர். மொதம் அந்த தம்பதிக்கு 5 குழந்தைகள் என்று கூறப்படுகிறது. நேற்று இரவு அந்த சகோதிரிகள் காணாமல் போன நிலையில், இன்று அந்த மூன்று சகோதரிகளும், அவர்கள் வீட்டில் இருந்த ஒரு டிரங்கு பெட்டிக்குள் சடலமாக கிடைத்ததை கண்டு அந்த தந்தை அதிர்ந்துபோயுள்ளார். 

அந்த தந்தை ஒரு புலம்பெயர்ந்த தொழிலாளி என்றும், அவருடைய குடும்பத்தில் ஐந்து குழந்தைகள் இருப்பதாக போலீசார் விசாரணையில் தெரிவித்துள்ளனர். இறந்து கிடந்த அந்த சகோதிரிகள் சகோதரிகள் காஞ்சன் (4 வயது), சக்தி (7 வயது) மற்றும் அமிர்தா (9 வயது) என அடையாளம் காணப்பட்டனர் என்று போலீசார் தெரிவித்தனர். 

தமிழகத்தில் 3 வங்கிகளில் ரூ.2,650 கோடிக்கு வரவு வைக்கப்பட்ட ரூ.2 ஆயிரம் நோட்டுகள்

இறப்புக்கான காரணத்தை அறிய, அந்த மூன்று சகோதிரிகளின் உடல்களும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன என்று அதிகாரி ஒருவர் கூறினார். அந்த சிறுமிகளின் தந்தை இன்று திங்கள்கிழமை தனது வீட்டில் உள்ள பொருட்களை இடம்மாற்றியபோது, ​​வழக்கத்துக்கு மாறாக ஒரு பெட்டி கனமாக இருப்பதை அவர் உணர்ந்துள்ளார். 

உடனடியாக அவர் அண்ட் பெட்டியைத் திறந்து பார்த்தபோது, ​​அவரது மூன்று மகள்கள் உள்ளே இருப்பதைக் கட்னு அதிர்ந்து போலீசாரிடம் அவர் தெரிவித்துள்ளார். போலீசார் கூற்றுப்படி, இறந்த அந்த சிறுமிகளின் தந்தையை, அவருடைய குடிப்பழக்கம் காரணமாக வீட்டைக் காலி செய்யுமாறு அவரது வீட்டு உரிமையாளரிடமிருந்து எச்சரிக்கை ஒன்றை பெற்றுள்ளார்.
.
தற்போது இந்த விவகாரம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இப்போதைக்கு நீர் தருகிறோம்.. ஆனால்.? கண்டிஷன் போட்ட கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார்

Follow Us:
Download App:
  • android
  • ios