Jammu and Kashmir : மூன்று தலை கொண்ட 9ம் நூற்றாண்டு ‘அதிசய’ விஷ்ணு சிலை.. காஷ்மீரில் கண்டுபிடிப்பு !!

காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள காகபோரா பகுதியில் உள்ள ஜெஹ்லம் நதியில் இருந்து 9 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பச்சைக் கல்லால் செய்யப்பட்ட அரிய மூன்று தலைகள் கொண்ட விஷ்ணு சிற்பம் மீட்கப்பட்டுள்ளது.

Three headed ancient sculpture of Lord Vishnu recovered from river Jhelum at Jammu and Kashmir

பழமையான சிற்பம் கண்டுபிடிப்பு :

காஷ்மீரின் தெற்கில் உள்ள புல்வாமா மாவட்டம். அங்குள்ள ககாபுரா பகுதியில் சில தொழிலாளர்கள் மணல் எடுக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தனர். ககாபுரா பகுதியானது ஜீலம் நதியை ஒட்டியிருக்க கூடிய பகுதியாகும். அங்கு ஒரு பழைய சிற்பம் ஒன்றினை மணல் எடுக்கும் பணியில் ஈடுபட்டு இருந்த தொழிலாளர்கள் கண்டுபிடித்தனர்.

Three headed ancient sculpture of Lord Vishnu recovered from river Jhelum at Jammu and Kashmir

பிறகு இந்த சிற்பம் காஷ்மீர், தொல்லியல் மற்றும் அருங்காட்சியகங்களின் துணை இயக்குனரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஜே & கே காப்பகம், தொல்லியல் மற்றும் அருங்காட்சியகங்கள் துறையின் துணை இயக்குனர் முஷ்டாக் அகமது பெய்,  இது பற்றி கூறியபோது, ‘எங்கள் அருங்காட்சியகங்களில் இதுபோன்ற சிற்பங்கள் உள்ளன, ஆனால் இது பச்சைக் கல்லால் செய்யப்பட்ட ஒரே சிற்பம் இதுவொன்று தான். 

பழமையான விஷ்ணு சிலை :

Three headed ancient sculpture of Lord Vishnu recovered from river Jhelum at Jammu and Kashmir

இது மூன்று தலை கொண்ட இந்த விஷ்ணு சிலையானது, 9 ஆம் நூற்றாண்டின் தனித்துவமான சிற்பம் ஆகும். இது மிகவும் அரிதான பச்சைக் கல் சிற்பம். இந்த சிற்பத்தின் சில பகுதிகள் காணவில்லை. நன்றாக செதுக்கப்பட்ட மற்றும் நன்கு உடையணிந்து மெருகூட்டப்பட்ட சிற்பம் கி.பி 9 ஆம் நூற்றாண்டில் அவந்திபோராவில் பயன்படுத்தப்பட்ட சிற்ப பாணியை தெளிவாக நிரூபிக்கிறது’ என்று கூறினார்.

ஆகஸ்ட் 2021 இல், ஜம்மு காஷ்மீர் காவல்துறை, மத்திய காஷ்மீரின் புட்காம் மாவட்டத்தில் உள்ள கான்சாஹிப் பகுதியில் உள்ள ஒரு உள்ளூர் ஒருவரிடமிருந்து 1,200 ஆண்டுகள் பழமையானது என்று நம்பப்படும் துர்கா தேவியின் சிற்பத்தை மீட்டெடுத்தது. போலீசார் அவரது வீட்டில் இருந்து சிற்பத்தை மீட்டெடுப்பதற்கு முன்பு உள்ளூர்வாசி அதை விற்க முயன்றார்.

Three headed ancient sculpture of Lord Vishnu recovered from river Jhelum at Jammu and Kashmir

தேடுதலின் போது யாரிகா கான்சாஹப் பகுதியைச் சேர்ந்த அப்துல் ரஷித் ஷேக்கின் மகன் நவாஸ் அகமது ஷேக் என்பவரின் வீட்டில் இருந்து இந்த சிற்பம் மீட்கப்பட்டது. நவாஸ் ஷேக் மணல் எடுப்பதற்காக தோண்டியபோது ஒரு ஓடையில் சிற்பத்தை கண்டுபிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios