Asianet News TamilAsianet News Tamil

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் திடீர் போர்க்கொடி உயர்த்த முக்கிய 5 காரணங்கள் இதுதான்…

This is the main reason for the Supreme Court judges raising the battlefield ...
This is the main reason for the Supreme Court judges raising the battlefield
Author
First Published Jan 12, 2018, 8:28 PM IST


உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீது 4 மூத்த நீதிபதிகள் நேற்று பரபரப்பு குற்றச்சாட்டையும், வேதனையும் தெரிவித்தனர். நீதிமன்ற வரலாற்றிலேயே  இதுவரை நடந்திராத நிகழ்வாக, தலைமைநீதிபதி மீது நீதிபதிகள் குற்றச்சாட்டை வெளிப்படையாக முன்வைத்துள்ளனர்.

4 நீதிபதிகளும் கூறும் முக்கிய பிரச்சினைகள், கவலை என்ன?

1. அனைத்து முக்கிய வழக்குகளும், பொதுநலன் சார்ந்த வழக்குகளும் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராதலைமையிலான அமர்வுக்கு மட்டுமே விசாரிக்கிறது. மற்ற மூத்த நீதிபதிகள் தலைமையிலான அமர்வுக்கு மாற்றப்படுவதில்லை என்பது முதல் குற்றச்சாட்டாகும்.

2. நாட்டுக்கும், நீதித்துறைக்கும் நீண்ட கால விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய, உண்டாக்கக் கூடிய வழக்குகளை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, தனக்கு வேண்டிய நீதிபதிகளுக்கு மட்டுமே ஒதுக்கீடு செய்கிறார். அதில் நியாயத்தின் அடிப்படையில் வழக்குகளை ஒதுக்குவதில்லை. இந்த நடவடிக்கை அனைத்தும் தடுக்கப்பட வேண்டும். இது 2-வது குற்றச்சாட்டாகும்

3. ஷொராபுதீன் போலி என்கவுன்ட்டர் வழக்கை விசாரித்த சி.பி.ஐ. சிறப்பு நீதிபதி பி.எம். லோயா மர்ம மரணம் குறித்த பொது நலன் வழக்கை தலைமை நீதிபதி அல்லாத, மூத்த நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு மாற்றப்படாமல், 10ம் எண் கொண்ட நீதிபதிக்கு மாற்றப்பட்டுள்ளது வேதனையளிக்கிறது. இது 3-வது காரணமாகும்.

4. மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை ஊழல் வழக்கு, நீதிபதி செலமேஸ்வர் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்ட பின், அதை  7-ம் எண் கொண்ட நீதிமன்றத்துக்கு அனுப்பப்பட்டது. இது 4-வது விஷயமாகும்

5. 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரணை செய்த வழக்கை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராதலைமையிலான சிறிய அமர்வு விசாரணை செய்தது தவறானது. இது 5-வது குற்றச்சாட்டாகும்.

Follow Us:
Download App:
  • android
  • ios