உலகின் மிக விலை உயர்ந்த சட்டை அணிந்திருக்கும் இந்தியர்: விலை எவ்வளவு தெரியுமா?
உலகின் மிக விலை உயர்ந்த சட்டையை அணிந்து இந்தியர் ஒருவர் வலம் வருகிறார். அந்த சட்டையின் விலை என்ன?
மகாராஷ்டிராவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரும், அரசியல்வாதியுமான பங்கஜ் பராக் (47) என்பவர் உலகின் மிக விலை உயர்ந்த சட்டை அணிந்திருக்கும் நபர் என கடந்த 2016ஆம் ஆண்டில் கின்னஸ் உலக சாதனையில் இடம்பிடித்தார். தங்கச் சட்டையுடன் வலம் வரும் மனிதர் என அவரது நண்பர்களால் அழைக்கப்படும் பங்கஜ் பராக் அணிந்திருக்கும் சட்டையின் விலை, GWR அறிக்கையின்படி, 2014ஆம் ஆண்டில் ரூ. 98,35,099 ஆகும்.
இதுகுறித்து பங்கஜ் பராக் கூறுகையில், “நான் மகாராஷ்டிராவின் தொலைதூரப் பகுதியைச் சேர்ந்த ஒரு சாதாரண மனிதன். இந்த சாதனை எனது கிராமத்தின் பெயரை உலகம் முழுவதும் உயர்த்தியதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.” என்றார். 8ஆம் வகுப்போடு பள்ளிப்படிப்பை நிறுத்திய பங்கஜ் பராக், யோலாவில் உள்ள அவரது குடும்பத்திற்கு சொந்தமான ஆடை வணிகத்தில் ஈடுபடத் தொடங்கினார். சிறிது காலத்துக்கு பின்னர் குடும்பத் தொழிலில் இருந்து விலகி, 1982ஆம் ஆண்டில் தனியாக ஜவுளித் தொழிலில் இறங்கினார்.
தொழிலில் அவரது வெற்றி அவரை அரசியலில் நுழைய வழிவகுத்தது. இறுதியில் மும்பையிலிருந்து 260 கிமீ தொலைவில் அமைந்துள்ள யோலா நகரத்தின் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் துணை மேயரானார்.
உழவர் பெருமக்களை திமுக அரசு உயிராக நினைக்கிறது: முதல்வர் ஸ்டாலின்!
பங்கஜ் பராக் அணிந்திருக்கும் 4.10 கிலோ எடையுள்ள தங்கச் சட்டையின் மதிப்பு தற்போது ரூ.1.30 கோடிக்கு மேல் இருக்கும். அதுதவிர, தங்கக் கடிகாரம், ஏராளமான தங்கச் சங்கிலிகள், பெரிய தங்க மோதிரங்கள், தங்க மொபைல் கவர், தங்க நிறக் கண்ணாடிகள் என மொத்தம் 10 கிலோ எடையுள்ள தங்கத்தை தினமும் சுமக்கிறார் அவர். தாம் சுமந்து செல்லும் தங்கத்தை பாதுகாக்க இரண்டு காவலர்களை பணியமர்த்தியுள்ள அவர், உரிமம் பெற்ற கைத்துப்பாக்கியும் வைத்துள்ளார்.
மேலும், தனது பள்ளிப்பருவத்திலேயே இதுபோன்று ஆடை அணிய வேண்டும் என ஆசை இருந்ததாக தெரிவிக்கும் அவர், 2014ஆம் ஆண்டில் தனது பிறந்தநாளுக்கு இந்த சட்டையை தைத்ததாக கூறியுள்ளார்.
நாசிக்கில் உள்ள பாஃப்னா ஜூவல்லர்ஸ், மும்பையில் உள்ள சாந்தி ஜூவல்லர்ஸ் மூலம் வடிவமைக்கப்பட்ட இந்த சட்டையை தேர்ந்தெடுக்கப்பட்ட கைவினைஞர்கள் 20 பேரைக் கொண்ட இரண்டு குழுவினர், இரண்டு மாதங்களில் 3,200 மணிநேரம் எடுத்து வெற்றிகரமாக இதனை தைத்து முடித்துள்ளனர்.
வெளிப்புறம் தங்க நிறமாக இருந்தாலும், சட்டை முழுமையாக நெகிழ்வாகவும், வசதியாகவும், மெல்லிய துணியால் உள்ளே உடலுக்கு பாதிப்பில்லாததாகவும் இருக்கும் வகையில் தைக்கப்பட்டுள்ளத்து.