புதையலை எடுக்க திருப்பதி தரிசனம் 9 நாள் ரத்து..!  சந்தேகத்தை  வலுபடுத்தும் ரோஜா..!

திருப்பதியில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பக்தர்களுக்கு 9 நாள் சாமி தரிசனம் ரத்து செய்துள்ளதாக நிர்வாகம் அறிவித்து உள்ளது

12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா கும்பாபிஷேகம் வரும் மாதம் 11 ஆம் தேதி நடைப்பெற உள்ளது. இந்த நாள் முதல் அடுத்து வரும் 9 நாட்களுக்கு தரிசனம் ரத்து என நிர்வாகம் தெரிவித்துள்ளதற்கு  நகரி தொகுதி எம்எல்ஏ ரோஜா சந்தேகம் எழுப்பி உள்ளார்.

திருப்பதி ஏழுமலையான் கொவிலின் முன்னாள் தலைமை அர்ச்சகர் ரமண தீட்சதலு  கோவில் நிர்வாகம் மீது ஏகப்பட்ட குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்

அதில், உள்பிரகாரம் உள்ள இடத்தில் அதாவது அன்னதானம் தயார் செய்யும் இடத்திற்கு அடியில் உயரிய மதிப்புடைய தங்கம் மற்றும் வைர நகைகள் வைக்கப்பட்டு உள்ளதாகவும், சமீபத்தில் இந்த அடுப்பை மூடப்பட்டு வேறு இடத்திற்கு மாற்றப்பட்டதாகவும் ரமண தீட்ஷிதலு தெரிவித்து இருந்தார்.

மேலும் வைர நகை காணாமல் போனது பற்றியும் சந்தேகம் எழுப்பி இருந்தார். இந்நிலையில் தொடர்ந்து 9 நாட்களாக, தரிசனம் ரத்து என நிர்வாகம் அறிவித்து உள்ளது சந்தேகத்தை அதிகரித்து உள்ளது என்றும், அந்த 9 நாட்களுக்குள் அங்கிருக்கும் புதையலை எடுக்க தான் இந்த தரிசனம் ரத்து என்ற முயற்சி என கேள்வி எழுப்பி உள்ளார்.

இந்த விவகாரம் மேலும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. ரமண தீட்திதலு ஏற்கனவே பல குற்றச்சாட்டுகளை முன் வைத்து வரும் போது அதற்கு ஏற்றவாறு தற்போது கோவில் நிர்வாகம் தொடர்ந்து 9 நாட்களுக்கு தரிசனம் ரத்து செய்துள்ளது என்பது  குறிப்பிடத்தக்கது.