Thirumani death in Kashmir - The CM who comforted parents

திருவள்ளூரைச் சேர்ந்த திருமணி என்ற இளைஞர் சமீபத்தில் தனது நண்பர்களுடன் காஷ்மீருக்கு சுற்றுலா சென்றபோது, பர்காம் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர்களுக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கல்வீச்சுத் தாக்குதலில் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது.

இதனால் ரத்த வெள்ளத்தில் மிதந்த திருமணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சையின் பலனின்றி சில நிமிடங்களில் மரணம் அடைந்தார். திருமணியின் பெற்றோரை ஜம்மு-காஷ்மீர் முதலமைச்சர் மெகபூபா முப்தி சந்தித்து இரங்கல் தெரிவித்தார். தற்போது தமிழகம் கொண்டு வரப்பட்ட திருமணியின் உடல் நல்லடக்கம்
செய்யப்பட்டுள்ளது.