Asianet News TamilAsianet News Tamil

எல்லையில் போர் மேகம் - நாட்டுக்குள்ளே கைகோர்ப்பு...!!!

There is a tense situation between the two countries due to China
There is a tense situation between the two countries due to China
Author
First Published Jul 7, 2017, 9:59 PM IST


சிக்கிம் மாநில எல்லைப் பகுதியில் அமைந்துள்ள 'டோக்லாம்' பிரதேசதிற்கு சீனா உரிமை கொண்டாடுவதன் காரணமாக இரு நாடுகளிடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. எல்லையில் அதிக அளவில் இந்தியப் படைகள் குவிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் இந்தியா, சீனா மற்றும் பிரேசில் உள்ளிட்ட ஐந்து நாடுகள் உறுப்பினர்களாக உள்ள 'பிரிக்ஸ்' அமைப்பின் தலைவர்கள் ஜெர்மனியின் ஹாம்பர்க் நகரில் சந்தித்து பேசினார். . தற்பொழுது இந்த அமைப்புக்கு தற்பொழுது சீன அதிபர் ஜின்பிங் தலைவராக உள்ளார். இந்த மாநாட்டில் ஜின்பிங்கும் மோடியும் சந்தித்தபோது ஒருவருக்கொருவர் கை குலுக்கி வாழ்த்து தெரிவித்துக்கொண்டனர்.

இருப்பினும் எல்லையில் நிலவும் பதற்றம் காரணமாக இரு நாட்டுத் தலைவர்களுக்கான நேரடி சந்திப்பு ஏற்பாடு செய்யப்படவில்லை. ஆனால் மாநாட்டில் மோடி பேசும் பொழுது, ஜின்பிங் தலைமையில் பிரிக்ஸ் அமைப்பின் செயல்பாடு சிறப்பாக அமைந்துள்ளதாகவும், இந்த வருட இறுதியில் சீனாவின் ஜியாமென் நகரில் நடக்க உள்ள பிரிக்ஸ் உச்சி மாநாட்டுக்கு, இந்தியா முழு ஒத்துழைப்பு தரும்' எனவும் தெரிவித்தார்.

முன்னதாக சீன அதிபர் ஜின்பிங் பேசும் பொழுது, 'தீவிரவாதத்தினை எதிர்த்து போராடி வரும் இந்தியாவின் உறுதியினையும், கோவாவில் 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டுக்குப் பிறகு அதன் செயல்பாடுகளில் உண்டாகியுள்ள உத்வேகத்தினையும் பாராட்டினார். மேலும் சமூக மற்றும் பொருளாதார முன்னேற்ற செயல்பாடுகளில் இந்தியா வெற்றி பெறவும் அவர் வாழ்த்து தெரிவித்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios