"அவர்கள் கவனம் ஏழைகளின் பசியில் இல்லை.. அதிகார பசியில் உள்ளது" - எதிர்கட்சிகளை விளாசிய பிரதமர் மோடி!

மக்களவையில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு தொடர்ச்சியாக பதில் அளித்த இந்திய பிரதமர் மோடி, எதிர்க்கட்சிகளை கடுமையாக சாடியுள்ளார்.

Their focus not on  hunger of the poor but on the hunger for power Prime Minister Modi slams opposition parties lok sabha

மக்களவையில் தனது அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி இந்தூர் வியாழக்கிழமை பதிலளித்தார். அப்போது எதிர்க்கட்சிகளை கடுமையாக தாக்கிய பிரதமர் மோடி, அவர்கள் நாட்டை விட தங்கள் கட்சிகளின் மீது அதிக அக்கறை காட்டுவதாக குற்றம் சாட்டினார். எதிர்க்கட்சிகளின் கவனம் "ஏழைகளின் பசியில் இல்லை, ஆனால் அதிகாரப் பசியில் உள்ளது" என்று அவர் கூறினார்.

மேலும் எதிர்க்கட்சிகளில் ஒன்றான அகில இந்தியா பார்வர்டு பிளாக் பற்றி பேசும்போது, "புதிய வண்ணப்பூச்சு பூசுவதன் மூலம் பழைய வாகனத்தை மின்சார வாகனமாக மாற்ற முயற்சிக்கிறீர்கள்" என்று கூறினார்.

மேலும் பேசிய அவர்.. "இன்று, மக்கள் ஆசியுடன், முந்தைய அனைத்து சாதனைகளையும் முறியடித்து, தேசிய ஜனநாயகக் கூட்டணியும், பாஜகவும் மாபெரும் வெற்றியுடன் மீண்டும் வரும் என்பதை, எதிர்கட்சிகளாகிய நீங்கள் முடிவு செய்துள்ளதை என்னால் பார்க்க முடிகிறது" என்று பிரதமர் மோடி கூறினார். கடந்த 2018ம் ஆண்டு நம்பிக்கையில்லா பிரேரணையின் போது, ​​இது எங்களுக்கான பரீட்சை அல்ல என்றும், அது அவர்களுக்கான பரீட்சை என்றும் கூறினேன், அதன் விளைவாக அவர்கள் அந்த தேர்தலில் தோற்றுப் போனார்கள் என்றும் மோடி தெரிவித்தார். 

பாஜகவின் மிரட்டல்களுக்கும் பூச்சாண்டிக்கும் அஞ்ச மாட்டோம்- இறங்கி அடிக்கும் ஸ்டாலின்

நாடாளுமன்ற நடவடிக்கைகளை சீர்குலைப்பதற்காக எதிர்க்கட்சிகளை கடுமையாக சாடிய பிரதமர் மோடி, “கடுமையான விவாதம் தேவைப்படும் பல மசோதாக்கள் இருந்தன, ஆனால் எதிர்க்கட்சிகள் அதில் அக்கறை காட்டவில்லை. தங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு எதிர்க்கட்சிகள் துரோகம் இழைத்துவிட்டன என்றார்.
“எதிர்க்கட்சியால் நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதத்திற்குத் தயாராக முடியவில்லை. அதன் ஆதரவாளர்கள் கூட ஏமாற்றம் அடைந்துள்ளனர்” என்று பிரதமர் மோடி கூறினார்.

“எதிர்க்கட்சியில் உள்ள மிக முக்கியமான பேச்சாளர்கள் பட்டியலில் இடம் பெறவில்லை; ஆனால் ஆதிர் ரஞ்சன் சவுத்ரிக்கு நேரம் கொடுப்பதாக அமித்ஷா உறுதியளித்தது அமித் ஷாவின் பெருந்தன்மையாகும்,” என்று பிரதமர் மோடி கூறினார், “ஆதிர் ரஞ்சன் சவுத்ரியை ஓரங்கட்ட வேண்டிய நிர்பந்தம் ஏன் காங்கிரஸுக்கு ஏற்பட்டது என்று எனக்குத் தெரியவில்லை, ஒருவேளை கொல்கத்தாவில் இருந்து அழைப்பு வந்திருக்கலாம்” என்றும் அவர் கூறினார்.

எதிர்க்கட்சிகள் நோ-பால் போட்டால் நாங்கள் சதம் அடிப்போம்! பதிலடி கொடுக்கும் பிரதமர் மோடி!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios